DSpace Repository

இசைமேதை பாபநாசம் சிவன்

Show simple item record

dc.contributor.author Sivasaamy, V.
dc.date.accessioned 2022-11-11T06:11:01Z
dc.date.available 2022-11-11T06:11:01Z
dc.date.issued 1984
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8499
dc.description.abstract இந்திய இசை நீணடகால வரலாறு கொண்டது. சிந்துவெளி நாக ரிகத்திற்கு முன்பே அது தோன்றிவிட்டது. எனினும், வரலாற்று மூலங் களின் திட்டவட்டமான அடிப்படையிலே நோக்கும்போது, சிந்து சமவெளி நாகரிக காலம்தொட்டு இக்காலம் வரையுள்ள அதன் வரலாற்றிலே பல் வேறு அபிவிருத்திகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளமையினைக் காணலாம். பரந்த பாரததேசத்திற்குரிய பொதுவான சாஸ்திரிய இசைமரபுகளுடன், அவ்வப் பிராந்தியங்களுக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த இசைமரபுகளும் நிலவிவருகின்றன. இவ்வாறு உற்றுநோக்கும்போது, தென்பாரத நாட்டி லுள்ள தமிழகத்திலே சங்ககாலத்திற்கு முன்பே தனிப்பட்ட இசைமரபு கள் தோன்றிவிட்டமை தெளிவு. சங்க நூல்களிலும், குறிப்பாகச் சங்ககால முடிவில் எழுந்த கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றிலும், சிலப்பதி காரத்திலும் இவ்விசைமரபுகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இயற்கை நிலைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பண்ணிசை சங்ககாலத்தைத் தொடர்ந்து, பல்லவர் - பாண்டியர் காலச் சைவ நாயன்மார்களின் தேவா ரம், திருவாசகம் ஆகியனவற்றிலும், வைஷ்ணவ ஆழ்வார்களின் திருப்பாசு ரங்களிலும் மிக்க வளர்ச்சியடைந்தது; தொடர்ந்து, திருவிசைப்பா, திருப் பல்லாண்டு ஆகியனவற்றிலும் அது நன்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலே தமிழிசை நன்கு வளர்ச்சிபெற்றமையினைக் குறிப்பிடலாம். இக்காலப்பகுதியிலே கர்நாடக இசைக்குரிய இராகங் களும் பிரபல்யமடையலாயின. தமிழ்ப் பண்ணிசையினை அடிப்படையாகக் கொண்டுதான் தென்பாரதத்திற்குரிய கர்நாடக இசைக்கான இராகங்கள் தோன்றின எனப் பல ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவ்விராகங்களின், லக்ஷணங்கள் இராமாமாத்தியரின் ஸ்வரமேளகலாநிதி, சோமநாதரின் ராகவிபோதம், கோவிந்த தீக்ஷிதரின் சங்கீதசுதா, வேங்கடமகியின் சதுர் தண்டி பிரகாசிகா முதலிய நூல்களில் எடுத்துரைக்கப்படுகின்றன. இவ் விராகங்களில் அமைந்துள்ள சாஹித்யங்களை அன்னமாச்சாரியர், புரந்தர தாசர், க்ஷேத்திரஜ்ஞர், ஸ்யாமாசாஸ்திரிகள், தியாகராஜசுவாமிகள், முத்து சுவாமி தீக்ஷிதர் முதலிய வாக்கேயகாரர் இயற்றினர்; தொடர்ந்தும் பலர் இயற்றி வந்துள்ளனர். இசைக்குரிய பாடலை இயற்றுபவரே வாக்கேய காரர் (வாசம் கேயம் ச யஹ குருதே ஸ வாக்கேய காரஹ்) எனச் சார்ங்க தேவர் சங்கீதரத்னாகரத்திலே குறிப்பிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட பெரும் பாரம்பரிய இசைமரபிலே ஓர் இசைஞானியாகச் சமீபகாலத்திலே வாழ்ந் தவர்களிலே பாபநாசம் சிவன் நன்கு குறிப்பிடத்தக்கவர். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title இசைமேதை பாபநாசம் சிவன் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record