Abstract:
கற்போருக்குரிய கல்வி அனுபவங்களை ஒழுங்குப்படுத்தி வழங்கும் பாரம் பரியமான செயல்வடிவங்களுள் ஒப்பீட்டளவில் அதிக முதன்மை கொண்ட தும், பரந்தள விலே பின்பற்றப்படுவதும் பாடக்கலைத்திட்ட ஒழுங்கமைப் பாகும். அறிவு நோக்கை நிறைவேற்றி வைக்கும் பொருட்டு, பரந்து ஆழ்ந்து,
வவவ பொன் பற்றப்படுவதுவை பாக்கலை வியாபித்துச் செல்லும் அறிவு நிதியத் தொகுதியைப் பாடங்களாக வகுத்து, பாடங்களின் அடிப்படையிற் கற்றலை வளம்படுத்தி, எண், எழுத்து , வாசிப்பு என்ற பாடங்களுடன் ஆரம்பித்து, அவற்றை அடியொற்றிய தனித்தனி பாடத்துறைகளாகக் கல்விச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப் படுகின்றன. பாடங்களை நடுநாயகமாகக் கொண்ட கற்றல் - கற்பித்தல் ஆகியவை இயக்கமுறும் பொழுது, அவை மனனக் காட்டுருவகை உருவாக் கிய எதிர்மறைப் பண்புகளுடன் இணைந்து நின்றமை நவீனவடிவங்கள் பற்றிய தேடுதல்களுக்குரிய தேவையைக் கொடுத்தன.
ஐரோப்பியர் வருகையும் இந்நாட்டின் கல்வி அனுபவ ஒழுங்கமைப் பிலே நிகழ்ந்த வளர்ச்சிநிலைகளும், சமூகக்கட்டுமானத்துடன் இணைந்த தாகப் பாடக்கலைத்திட்டவகை சார்ந்த ஏற்பாடுகளுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தங்கொடுத்தன. சொல்சார்ந்த கற்பித்தலின் மிகை அழுத்த நிலைகள் பரீட்சைகளின் ஆதிக்க நிலைகள், தனியாள் வேறுபாடுகளைத் தழுவாத கற் பித்தல் முயற்சிகள், பாடப் பரப்புக்களை உள்ளடக்கிய ஆசிரியர் பயிற்சி, பாடநெறிகளை உள்ளடக்கிய வாண்மைத்தெரிவுகள் என்பவை வளர்ந்து சென்ற நிலையில் அவை வாழ்க்கையின் இயங்கியல் மாற்றங்களுடன் பூரண மாக ஒன்றிக்கவில்லை. பாடக்கலைத்திட்டத்துடன் இணைந்த எதிர்மறைப் பண்புகளைச் சீர்திருத்தும் பரிசோதனை ஒழுங்கமைப்பு உபாயமாக 'ஹன் தெச' கலைத்திட்டம் 1932ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பெற்றதாயினும், 1 அது வரலாற்றுக் காரணிகளினால் ஆழ்ந்த செல்வாக்குச் சுவடுகளைப் பதிக்க முடியாதிருந்தது. அரசியற் சுதந்திரத்தின் பின்னரும் சமூக அறைகூவல்களை அணுகக்கூடிய கல்வி ஒழுங்கமைப்புக் கட்டியெழுப்பப்படவில்லை என்று கூறப் பெற்ற கண்டனங்கள், 2 பாடக்கலைத்திட்டச் செயற்பாடுகளின் பிரதிகூலங்க ளுடனும் இணைந்து நின்றன.
உலகளாவிய முறையில், பாடக்கலைதிட்ட ஒழுங்கமைப்பின் குறைபாடு களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளுள், பாடங்களிடையே சமநிலையைப் பொதிதல், உட்கருவாகும் பாட உள்ளடக்கத்தை நிறுவுதல், பாடங்க ளிடையே ஒன்றிணைப்பை ஏற்படுத்தும் உபாயங்களைக் கையாளுதல் என் பவை மேற்கொள்ளப் பெற்றாலும், அனைத்துத் துறைகளையும் தழுவிய முழுமையான கல்வி, பாடங்களால் மட்டும் நிறைவேற்றப்பட முடியா தென்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டினர்