Abstract:
கி. பி. 13ஆம் நூற்றாண்டு தென் ஆசிய, தென் கிழக்காசிய நாடு களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகிறது. அப்போது தென் கிழக் காசியாவும் இந்தியாவில் வட இந்தியா, தக்கணம் ஆகிய பகுதிகளும் இஸ்லாமியர் வசம் வந்தன. இதனால் இக்காலகட்டத்தில் இந்தியாவில் தென்னகத் திற்றான் இந்துமதமும் கலாசாரமும் பேணிப் பாதுகாக்கப்பட் டது. ஈழமும் தென்னாசியப் பிராந்தியத்தின் ஓரங்கமாக விளங்குவதால் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் காலகாலமாக ஏற்பட்டாலும் கூட, வட இந்தியாவில் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் பௌத்தம் சீரழிய, அதன் பின் னர் அராபிய படை எடுப்புக்கள் ஏற்பட கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஈழ - வட இந்தியத் தொடர்புகளில் ஸ்தம்பிதநிலை காணப்பட் டது. இதனால் இக்காலத்திற்குப் பின்னர் போத்துக்கேயர் வருகைக்கு முன்னர் ஈழ - இந்திய உறவுகள் இந்தியாவின் தென் பிராந்திய வட்டத் தினை மையமாக வைத்தே தொடர்ந்தன. மென்டிஸ் போன்றோர் இதனால் இக்காலப் பகுதியை ஈழ வரலாற்றில் தென்னிந்திய காலப்பகுதி எனக் கூறி இதனை இரு பிரிவுகளாகவும் பிரித்துள்ள னர். (Mendis, G. C. 1954) இவை முறையே பொலநறுவை அரசுக்காலமும் அதற்குப் பிற்பட்ட போத் துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலமுமாகும். முன் எப்போதுமில்லாத அளவுக்கு இந்து மதத்தின் தாக்கம் பொலநறுவைக் காலத்தில் ஏற்பட வழி வகுத்ததுதான் இக்காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட சோழரது ஆட்சியாகும் இப்பின்னணியில் வளர்ச்சிபெற்ற இந்து கலாச்சாரம், பின் வந்த பால் டிய, விஜய நகர அரசுகளின் தாக்கத்தினால், மேலும் உரம்பெற்று வளர்ச்சி யடைந்தது.