Abstract:
இலங்கை மக்களின் பிரதான உணவாக விளங்கும் நெல்லானது இந் நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகித்து வரு கின்றது.1 நெல் பயிரிடும் துறை, பாரிய துறையாக விரிவடைந்திருப்ப துடன் மட்டுமல்லாது, ஏனைய பல துறைகளுடனும் தொடர்புடைய தொன்றாகவும் உள்ளது. இலங்கையில் தற்போதிருக்கும் சனத்தொகைக்கும் எதிர்காலத்தில் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைக்கும் உணவினை வழங் கவும், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதன் மூலம் வேலையின்மைப் பிரச்சினை யைக் குறைக்கவும், கிராமப்புற மக்களின் வருமானத்தினை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும், நாட்டில் கைத் தொழில் விருத்தியினை ஏற்படுத்தவும், அரிசி, கோதுமை மா போன்றவற்றின் இறக்குமதியைக் குறைத்துச் சென்மதி நிலுவையின் பாதக நிலையினைக் குறைக்கவும், மிருகங்களுக்கான உணவினை (வைக்கோல், தவிடு போன் றன) அதிகரிக்கவும் நெற்பயிரின் உற்பத்தி அதிகரிப்பு இன்றியமையாத தாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் காரணமாக இலங்கையில் சுதந்திரத்தின் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நெல் உற்பத்தியினை அதி கரிப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளை ஊக்கப் படுத்தின. குடியேற்றத் திட்டங்கள் மூலம் காணி வழங்கல். விவசாயி களுக்குக் குறுங்கால நீண்டகாலக் கடன்களை நிறுவன ரீதியான மூலா தாரங் கள் மூலம் வழங்கல், மானிய அடிப்படையில் குறைந்த விலையில் கிருமி நாசினி, களைகொல்லி, உரம் போன்றவற்றை வழங்குதல், இந்திரமயமாக் கலை ஊக்கப்படுத்துதல், இலவச ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நட வடிக்கைகள் மூலம் அரசாங்கம் நெல்லின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முயன்று வந்துள்ளது.