DSpace Repository

'விலாசம்' தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு

Show simple item record

dc.contributor.author Mounaguru, S.
dc.date.accessioned 2022-11-11T05:41:54Z
dc.date.available 2022-11-11T05:41:54Z
dc.date.issued 1984
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8494
dc.description.abstract ‘விலாசம்' என்பது 19ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாடக உலகில் வந்து புகுந்த ஒரு புதிய நாடக வடிவமாகும். இதன் அமைப்பு முறை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை." ''நாடகத்திற்கு விலாசம் என்ற பெயரிட்டு பல விலாசங்கள் தமி ழகத்தில் நடைபெற்று வந்துள்ளன. இந்த விலாசம் என்ற பெயர் ஏன் வந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை''2 இதுவரை விரிவாக ஆராயப்படாததும், பெயர்க் காரணம் தெரியா ததும், 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத் திலும், ஈழத்திலும் பெருவாரியாக ஆடப்பட்டதுமான 'விலாசம்' என்னும் நாடக வடிவத்தின் தோற்றம் பற்றியும் அத்தோற்றத்திற்கான காரணம் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். விலாசம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும்: வடமொழியில் அமைந்த சில இலக்கியங்கள் விலாசம் என்ற பெயர் பெற்றிருந்தன. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் வடமொழியில் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தில் விலாசம் என்ற பெயர் வந்துள்ளமை அவதானித்தற்குரியது. எனவே விலாசம் என்பது வடமொழி மரபினடி யாக எழுந்த ஒரு இலக்கிய வடிவ மெனலாம். விலாசம் பற்றி தமது சதுரகராதியில் வீரமாமுனிவர் ஆடல் மகளிர் விளையாட்டு என்று விளக்கம் தருகின்றார். தமிழ் லெக்ஸிகனும் விலாசத் திற்கு விளையாட்டு என்றே விளக்கம் தருகிறது. 4 Play என்று நாடகத்தினை வழங்குவது மேனாட்டு வழக்கு. எனவே தான் விலாசத்தைப் play எனக் கருதி இத்தகையதொரு விளக்கத்தை இவர்கள் அளித்தனர் போலும். வடமொழி மரபினடியாக விலாசம் என்ற சொற்பிரயோகம் தமிழ் நாட்டில் 9ஆம் நூற்றாண்டிலிருந்து வந்திருப்பினும் தமிழில் விலாச நூல் கள் எழுந்த காலம் 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியே யாகும். தமிழ் நாடக உலகில் இவ்விலாசம் வந்து புகுந்தமையைப் பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் பின்வருமாறு கூறுவார். "தஞ்சாவூரிலே சரபோஜி மகாராஜா போன்றவர்களின் ஆட்சி சிலகாலம் நிலவியிருந்ததால் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூனாவிலிருந்து சாங்கிலி நாடக சபை போன்ற சில மராத்திய நாடக சபைகள் இந்திர விலாசம் போன்ற நாடகங்களை மராத்திய மொழியில் நடத்தலாயின. அதே தருனத்தில் பார்ஸி நாடகக் கம்பனிகள் சில வந்து பார்ஸி நாடகங்களையும் நடத்தின. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title 'விலாசம்' தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record