Abstract:
இன்று தொலைவு நுகர்வும் அத்துறை கொண்டுள்ள தொழில் நுட்பங் களும் ஒரு நவீன உயர் மட்ட ஆய்வுத்துறையாக மதிக்கப்படுகின்றது (Balachandiran, S. 1983a) . இன்றைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொலை நுகர்வுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பல தேவைகள் ஆராய்ந்து நிறைவேற்றப் படுகின்றன. பொருளாதார ரீதியில் குறிப்பாக நிலப்பயன்பாட்டு நோக் கில் நிலம், அது கொண்டுள்ள மூலவளம், மூலவளப் பயன்பாடு , மூலவளப் பேணுகை (Land: its Resource, Utilization and conservation) என்ப ன முக்கியமானவை. இவற்றின் பெறுபேறாகக் காலத்துக்குக்காலம் நிலப் பயன்பாடு (Land use) மாறுபடுகின்றது. நிலப்பயன்பாட்டை அறியும் முயற்சிகள் புவியியல் சிந்தனாவளர்ச்சிக்காலம் தொட்டுக் காணக்கூடியதாச இருந்தபோதிலும் நவீன தொழில் நுட்பங்கள் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் தான் நிலம் கொண்டுள்ள மூலவளத்தையும் அதன் பயன் பாட்டையும் அறிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. (Balachandiran, S. 1983b) இந்த முயற்சிகளும் அவை சார்ந்த தொழில் நுட்பங்களும் பொதுவாக தொலை நுகர்வுத் தொழில் நுட்பங்கள் (Remote sensing Techniques) என அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் தனியொருவரின் வெளியீட்டு ஆய்வில் (Field work) ஆரம்பித்து இன்று செய்மதி (Land Resource Satellites) ஆய்வாக இத்துறை பரிணமித்துள்ளது. வானவெளியியல், வளிமண்டல வியல், காலநிலையியல் என்ற வகையில் தொலை நுகர்வை ஆரம்பித்த செய்மதியுகம் இன்று நிலம், அதன் பயன்பாடு பற்றிய துறைகளில் ஆர்வம் கொள்ளுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகள் குறிப்பாக அபிவிருத்தி யடையும் வளர்முக நாடுகள் இத்துறையில் பெரும் அக்கறைகாட்டத் தொடங்கியுள்ளன. பொதுவாக ஆசியாக்கண்டத்தை எடுத்துக் கொண்டால் உலகவங்கியின் பாகுபாட்டின்படி கைத்தொழில் மயமான நாடுகளையும் (யப்பான்), நடுத்தர வருமானமுள்ள நாடுகளையும் (சீனா). குறைந்த வருமானம் உள்ள நாடுகளையும் (இலங்கை) கொண்டுள்ளது. ஆயினும் இவையனைத்தும் மேற்குறிப்பிட்ட துறையில் சிறப்பான அக் கறை கொண்டுள்ளன. உதாரணமாக இலங்கை 1978 ஆம் ஆண்டில் இருந்து தொலை நுகர்வுத் துறையில் தன்னையும் இணைத்துக்கொண்டது. 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பில் கூட்டப்பட்ட தொலை நுகர்வுபற்றிய மகாநாடு பொதுவாக தொலை நுகர்வுத் தொழில் நுட் பங்கள் பற்றியும் சிறப்பாக நிலப்பயன்பாட்டில் அவற்றின் பயன்பாடு பற்றியும் ஆராய்ந்த து (Proceedings 1982.) இதே போன்று 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய தொலை நுகர்வு மகாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது (Proceedings 1983.) தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்றனவும் தென்கிழக்காசிய நாடுக வான இந்தோனேசியா, தாய்லாந்து போன்றனவும் இதில் பங்குபற்றின. இழக்கா பிரிக்க நாடுகள் சிலவும் கலந்து கொண்டன.