dc.description.abstract |
நீர்ப்பாய்ச்சுதலின் நீண்டகால குறுங்காலத் திட்டங்களை இடுதல் நீர்ப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடு ஒன்றிற்கு மிக அத்தியாவசியமானதாகும், அதிவரட்சி, இடைவரட்சி, வரட்சிப் பிர தேசங்களில் நீர் கிடைப்பது அருமையாகவுள்ளதாலும் நீரின் தேவை அதிக மாக இருப்பதனாலும் கிடைக்கும் நீரினைக் குறித்த சூழலுக்கு ஏற்புடைத் தாகப் பயன்படுத்துவதற்கு நீர்ப்பாய்ச்சல் திட்டமிடுதல் ஆதாரமாக உள்ளது. நீர்ப்பாய்ச்சுதலைத் திட்டமிடுதல் மூலம் ஒரு அலகு நீருக்கான உற்பத்தித்திறனை முன்னரிலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படு கிறது. இத்தகைய முயற்சிகளில் திட்டமிடற் பிரதேசங்களின் நீர்ச்சம நிலையினைக் கணிப்பீடு செய்வது வலியுறுத்தப்படுவதொன்றாகவும் உள்ளது.
ஒரு பிரதேசத்தில் படிவு வீழ்ச்சி, ஆவியாக்க ஆவியுயிர்ப்பு நிலைமைகளை அடியொற்றி மண் ஈரத்திலோ, நீரின் இருப்பிலோ ஏற்படும் மாற்றத் தின் அளவினைக் கணிப்பிடுவது நீர்ச்சமநிலையில் பிரதான அம்சமாகும். நீர்ச்சமநிலையைக் கணிப்பிடுவதில் கழுவு நீர் அளவினைத் துணிந்து கொள்ள முடிகிறது. தோண்த்துவைட்டின் இலகுவான கால நிலை நீர்ச்சமநிலைச் சமன்பாடுகளைப் பிரயோகிப்பதன் மூலம் கழுவு நீர் போன்ற (ward, 1972) நீர்ச்சமநிலையின் ஏனைய அங்கங்களையும் அளவீடு செய்யலாம்.
தோண்த்துவைட் போன்றோர் பயன்படுத்திய காலநிலை நீர்ச்சமநிலை யினை (Thornthwaite, 1948, Thornthwaite and Mather, 1955) ஒரு பிர தேசத்தில் பிரயோகிக்கின்றபோது இலகுவான முறையில் அமைந்த மூன்று வேறுபட்ட தன்மைகளுக்கிடையில் பல காலநிலைப் பிரதேசங்களைக் காண முடிகிறது. ஒருபிரதேசம் அங்குள்ள தாவரங்களினாற் பயன்படுத்தக் கூடிய அளவினைவிடக் கூடிய மழைவீழ்ச்சியினைப் பெறுகின்ற பொழுது அதன் விளைவாக மேலதிக நீர் கிடைக்கப்பெறுகிறது. இது ஆறுகளின் ஓட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. வருடமுழுவதிலும் மேலதிக நீர் கிடைக்கின்றபொழுது என்றுமுள்ள ஆறுகள் அப்பிரதேசத்திற் காணப் படுகின்றன. தாவரங்களினாற் பயன்படுத்தக்கூடிய நீரளவினைவிடக் குறை வான மழைவீழ்ச்சி பெறப்படுகின்ற பிரதேசங்களில் நிரந்தரமான ஆறு கள் காணப்படுவதில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களான ஒருபருவத்தில் மேலதிக நீரும் மற்றைய பருவத்தில் நீர்ப் பற்றாக்குறையும் நிலவுகின்ற பகுதிகளில் பருவ ஆறுகளின் ஓட்டங்களையும், வரட்சித் தாக் கங்களையும் அவதானிக்க முடிகிறது. |
en_US |