dc.contributor.author | Kaasinathan, N. | |
dc.date.accessioned | 2022-11-11T05:08:17Z | |
dc.date.available | 2022-11-11T05:08:17Z | |
dc.date.issued | 1984 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8486 | |
dc.description.abstract | சங்ககாலப் பாண்டியர் முடியுடை மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர் சங்ககாலம் தொட்டே தமிழகத்தின் தென்பகுதியைச் சிறப்புற ஆண்டுவந்திருக்கின் றனர். சங்ககாலத்துப் பாண்டிய மன்னர்களின் ஆட்சி இயல்பற்றி சங்க கால இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். அது பல ராலும் ஆராயப்பெற்று எழுதப்பெற்றுள்ள ஒன்றாகும். பிற்காலப் பாண்டியர் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 14 ஆம் நூற்றாண்டு முடிய ஆண்ட பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சி இயலை எவ்வாறு அமைத்திருந்தார்கள் என்பதை ஆராய்வது மிகவும் இன்றியமையாத தாகிறது. ஆட்சியின் சாயல் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்த சங்ககாலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சி இயலின் சாயல் இந்தப் பிற்காலப் பாண்டிய மன்னர்களில் எந்த அளவுக்குப் பார்க்கமுடிகிறது; தங்களின் சமகாலத்தில் ஆட்சி புரிந்த பல்லவர், சோழர்கால ஆட்சி இயல் கூறுகள் எந்த அளவுக்குப் பாண்டியர்களின் ஆட்சி இயலில் ஆதிக் கம் செலுத்திற்று என்பவற்றைக் கண்டால்தான் பாண்டியர் கால ஆட்சி இயலை முழுமையாக ஆராய்ந்ததாகக் கருதலாம். இருபிரிவினராகப் பகுத்தல் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 14 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பாண்டிய மன்னர்களையே இரு பிரிவினராகப் பிரித்து ஒரு பிரிவினர் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர் என்றும், மற்றொரு பிரிவினர் கி. பி. 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 14 ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். அடிப்படை ஆதாரங்கள் முதற்பிரிவைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மொத்தம் 12 பேர் (சிலர் 14 பேர்) இருந்திருக்கின்றனர். அவர்களில் முதலாமவன் கடுங்கோன் என்பானாவான். இறுதியில் ஆண்டவர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன். இந்தப் பிரிவைச் சார்ந்த மன்னர்களைப்பற்றி அறிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஓரளவுக்குத் துணைபுரிகின்றன. தமிழிலக் கியமான பாண்டிக்கோவையும் சில செய்திகளைத் தருகிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | பாண்டியர்கால ஆட்சி இயல் | en_US |
dc.type | Article | en_US |