Abstract:
முதன் முதலாக ஆரியச் சக்கரவர்த்திகளது காலத்திலே சரல்வதிமகால் என்ற நூல் நிலையம் ஒன்று இருந்ததாக அறியப்படுகின்றது. இதுவே யாழ்ப்பாணக் குடா நாட்டின் நூல்நிலைய வரலாற்றில் நாம் அறிகின்ற முதன்முதல் நூலகம் பற்றிய செய்தியாகவும் இருக்கின்றது. இச்செய்தி பற்றி பல்வேறு சான்றுகளும் இருப்பதனால் இதனை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் தொடர்பாக இந்நூல் நிலையத்தினைப் பற்றிய செய்திகளை அறியமுடியவில்லை. அதன் தன்மை பற்றியோ அன்றேல் அமைப்புப் பற்றியோ எவ்வித தகவல்களையும் பெற முடியாமல் இருக்கின்றது. கையெழுத்துப் பிரதிகள் பல அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்பு மட்டுமே எமக்குக் கிடைக்கின்றது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு வைத்திருந்த பிரதிகளை யார் வாசித்தார்கள்? அவற்றை வாசிப் பதற்கு யாருக்கு உரிமை இருந்தன என்பன போன்ற விடயங்கள் தெளிவில்லாமலே இருக்கின்றன. தற்கால நூலகப் பண்புக்கமைய சரஸ்வதிம கால் இருந்ததாவென் பதையும் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கின்றது.
பரராசசேகரன் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆளுங்காலத்தில் ஊர் கடோ றும் பாடசாலைகள் அமைத்தும் தமிழ்ச் சங்கமொன்று தாபித்தும் தமிழை வளர்த்த தாக அறியமுடிகின்றது. புலவர்களைக்கொண்டு பலவகையான நூல்களையும் இயற்று வித்தான். இவனமைத்த தமிழ்ச் சங்கமே இரண்டாவது தமிழ்ச் சங்கமாகும்.