Abstract:
யாழ்ப்பாண வளாகம் மண் வாசனையை அடிப்படையாகக் கொண்டு பிரதேச நாவல்கள் எழுதப் படுகின்றன. பிராந்திய நாவல்கள், வட்டார நாவல்கள் மண் வாசனை நாவல்கள் என்ற பெயர்களாலும் இவ்வகை நாவல்கள் அழைக்கப்படுகின்றன. இந்நாவல் களில், குறிப்பிட்ட கதைக் கருவுக்குரிய களமாகிய நிலத்தோற்றம் அப்பிரதேசத் துக்குரிய மொழிவழக்கு, பழக்கவழக்கங்கள் ஆகியவைகள் முதன்மை பெறுகின்றன .
பிரதேச நாவல்களை எழுதுவோர் எந்தவொரு மொழியிலும் மிகக் குறை வானவர்களாகவே உள்ளனர். ஏனெனில், பிரதேச நாவல்களை எழுதுவதற்கு மிகுந்த உழைப்பும், மானிடவியல் அறிவும் அவசியமாகின்றன. மேலை நாட்டில் சிறந்த பிரதேச நாவலாசிரியர்களாக வில்லியம் ஃபோக்னரையும், தோமஸ் ஹார்டி யையும் குறிப்பிடுவர். தமிழ்நாட்டில் பிரதேச நாவல்களின் மூலபிதாக்களாக கே. எஸ். வேங்கடரமணி (முருகன் ஓர் உழவன்); சண்முகசுந்தரம் (நாகம்மாள்) சங்கரராம் (மண்ணாசை) என்போரைக் குறிப்பிடுவர்.