DSpace Repository

வேற்றுமையும் சொல்லொழுங்கும்

Show simple item record

dc.contributor.author Yogeswary, G.
dc.date.accessioned 2022-11-10T08:24:31Z
dc.date.available 2022-11-10T08:24:31Z
dc.date.issued 1976-04
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8479
dc.description.abstract தமிழிற் சொற்கள் தனித்தும், பல சொற்கள் ஒருவகை ஒழுங்கமைப்பில் தொடர்ந்தும் வருவதால் வசனம் அல்லது வாக்கியம் அமைகின்றது. படி என்ற பதம் ஒரு தனி வாக்கியம். இங்கு 'நீ படிப்பாய்' என்பதே படி என்பதால் உணர்த் தப்படுகின்றது. ஆனால் நீ என்ற முன்னிலைச் சொல்லும் 'ஆய்' என்னும் விகுதியும் வராமலே படி என்ற பதம் 'நீ படிப்பாய்' என்பதை உணர்த்துவதால் அந்த ஒரு சொல்லே ஒரு வாக்கியமாகின்றது . எளிய நிலையில் இரு சொற்கள் தொடர்ந்து அமையும் வாக்கியமாகத் தோன்றி நாகரீகம் வளர, வளரப் பல சொற்கள் தொடர்ந்து அமையும் அமைப்பு ஏற்படுகின்றது. இது உலக மொழிகளைப் பற் றிய ஒரு பொது வரலாற்றுக் குறிப்பாகும். குழந்தைகள் மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது, முதலில் ஒரு சொல் வாக்கியத்தினையே அமைக்கின் றனர், பின்னர் இரு சொல், மூன்று சொல் ஆகியவற்றால் அமையும் வாக்கியங் களைப் பேசுகின்றனர் என்பதையும் இங்கு நாம் மனங் கொள்ளுதல் நலம். வாக் கிய அமைப்பில் சொற்கள் தொடர்களாக அமையும் பொழுது வேற்றுமை உருபு கள் அங்கே முக்கிய பங்கினைப் பெறுகின்றன. பழம் பெரும் இலக்கண நூலா கிய தொல்காப்பியம் தொடக்கம், இன்று வரை வெளிவந்த இலக்கண நூல்கள் பலவற்றிலும் வேற்றுமை பற்றிக் கூறப்படுகின்றன. ஆனால் அந்நூல்கள் யாவும் வேற்றுமைபற்றிக் கூறுகின்ற பொழுது வேற்றுமை எத்தனை வகைப்படும், அவ் வேற்றுமைகளுக்குரிய உருபுகள் என்ன, அவை எவ்வெப் பொருள் களில் வருகின் றன; வேற்றுமை மயக்கம் என்றால் என்ன என்பன பற்றியே கூறுகின்றன. காலங்காலமாக மாணவர்களும் வேற்றுமை என்ற இலக்கணக் கூறினைப் படிக் கின்ற பொழுது வேற்றுமையின் உருபுகள் யாவை; அவை கொள்ளும் பொருள்கள் யாவை; அதனால் ஏற்படும் மயக்கம் என்பது யாது என்றே கற்கின்றார்கள். ஆனால் இந்த வேற்றுமை உருபுகளானவை தொடரின் கண் வருகின்ற பொழுது எவ்வாறு பொருளை மாறுபடுத்துகின்றன என்பதனையோ, வாக்கிய அமைப்பில் என்ன விதமான ஒழுங்கமைப்பில் வருகின்றனவென்றோ (வாக்கிய அமைப்பில்) எத்தகைய இடத் தைப் பெறுகின்றன என்பதனையோ அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்கள் என்றே கூறலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title வேற்றுமையும் சொல்லொழுங்கும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record