dc.description.abstract |
மனிதனைப் பற்றியும், அவனது ஆக்கங்களையும் நடத்தையையும் ஆரா யும் அறிவியல் துறையே மானிடவியல் எனச்சுருக்கமாகக் கூறலாம். மனிதன் பற்றிய ஆய்வு எனக் கூறும் பொழுது தனி மனிதன் பற்றிய ஆய்வை அது குறிக்கவில்லை மானிடவியல் தனிமனிதனை அன்றி மானிடக் குழுக்கள், இனங்கள், சமூகங்கள் பற்றிய ஆய்வுத்துறையாக அமைகின்றது. அது மனிதனைச் சமூகமனிதன் என்ற நிலையில் வைத்து ஆய்கின்றது. உடலியல், உடலமைப்பியல், உளவியல் முதலிய அறிவியல் துறைகளின் ஆய்வுப்பொருளாக தனி மனிதன், தனிமனித நடத்தை என் பன அமையும். மானிடவியலோவெனின் சமூகமனிதன் பற்றிய இயலாகும்.
அறிவியலை இயற்கை அறிவியல், (Physical Sciences) சமூகஅறிவியல் (Social Scie - nces)என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பௌதிகம், இரசாயனம், உடலியல் என்பன இயற்கை அறிவியலில் அடங்கும் துறைகளுக்கு உதாரணங்களாகும். சமூக அறிவி யல் துறையில் அடங்குவன பொருளியல், சமூகவியல், அரசியல் போன்ற அறிவியல் கள். மானிடவியல் இயற்கை , சமூக அறிவியல் கள் என்ற இரு பிரிவுகளையும் தழுவிய அறிவியலாகும். இந்த அடிப்படையில் மானிடவியலை 1. பௌதீக மானிட வியல் 2. சமூக அல்லது பண்பாட்டு மானிடவியல் என இரு பிரிவுகளாக வகுக்கலாம் : |
en_US |