DSpace Repository

பொருளியலிற் பொதுக்கொள்கையின் முக்கியத்துவம்

Show simple item record

dc.contributor.author Perinpanathan, N.
dc.date.accessioned 2022-11-10T08:20:23Z
dc.date.available 2022-11-10T08:20:23Z
dc.date.issued 1976-04
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8476
dc.description.abstract பொருளியலை முறையாகப்பயில முனையும் எந்த ஒரு மாணவனும் ஆரம் பத்திலேயே 'யோன் மேனாட் கெயின்ஸ்' (John Maynard Keynes) என்ற பெயரினை அறிந்து கொள்கிறான். இவ்வாறு யோன் மெனாட் கெயின்ஸ் என்ற பெயர் பொருளிய லில் முக்கியத்துவம் பெறக் காரணமாக அமைந்தது அவர் எழுதிய "வேலை வாய்ப்பு வட்டி, பணம் என்பன பற்றிய பொதுக் கொள்கை '' (The General Theory of Employment, Interest and Money) என்ற நூலேயாகும், இந்நூல் 1936 இல் வெளி யிடப்பட்டவுடனே பொருளியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டதென்று கூறினாலும் மிகையாகாது. இந்நூல் நீண்ட பெயரைக்கொண்டதாக இருப்பினும் ''பொதுக் கொள்கை' ' (General Theory) என்று சுருக்கமாக அழைக் கப்பட்டு வருவது மரபாகி விட்டது. ''எனது தர்க்கரீதியான நியாயங்களையும் முடிபுகளையும் பழம் பொருளியலாளரின் கொள்கையோடு ஒப்பிட்டு நோக்கி வேறு படுத்திக் காட்டுவதற்காகவே 'பொது' என்ற சொல்லை அழுத்திக் கூறினேன்'' என கெயின்ஸ் நூலின் ஆரம்பத்திலேயே தெரிவிக்கிறார். றிக்காடோ, யேம்ஸ் மில் ஆகியவர் களை மட்டுமல்லாது, ஜே. எஸ். மில், மாஷல் எட்ஜ் வர்த், பிகு போன் றோரையும் கெயின்ஸ் பழம் பொருளியலாளர் என்ற வரிசைக்குள் அடக்குகிறார். நூலிற் காணப்படும் கருத்துக்களும் ''பொதுக் கொள்கை'' என்ற பெயரினை வலி யுறுத்துவனவாக உள்ளன. பழம்பொருளியலாளரது கருத்துக்கள் பல நிறை தொழில் மட்ட நிலைமைக்கு மட்டுமே பொருந்துவன. ஆனால் கெயின் சின் கருத் துக்கள் நாட்டில் நிறை தொழில் மட்டம் நிலவினாலும் நிலவாவிட்டாலும், இரண்டு நிலைமை களுக்கும் பொருந்தக்கூடியனவாக உள்ளன. பழம் பொருளியலா ளர்களது கருத்துக்களில் பணச்சார்பான கருத்துக்களும், மெய்சார்பான கருத் துக்களும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுத் தொடர்பற்றுக் காணப்பட்டன. ஆனால் அவ்விருவகையான கருத்துக்களையும் இணைத்து அவற்றில் இருந்து பொதுவான முடிபுகளைக் கூறியதனாலும் அந்நூலுக்குப் ''பொதுக் கொள்கை'' என்ற பெயர் இருப்பது பொருத்தமானதாகும். பொதுக் கொள்கையில் கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் கெயின்சுக்கே சொந்தமானவையுமல்ல. அந்நூலிற் காணப்படும் பல கருத்து துக்கள் கெயின்சுக்கு முன்பே பலரால் கூறப்பட்டிருந்தன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title பொருளியலிற் பொதுக்கொள்கையின் முக்கியத்துவம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record