Abstract:
இன்றைய நிலையில் இந்தோசீன, இந்தோனேசிய நாடுகளுள் பெரும்பாலானவை இஸ்லாமியப் பண்பாட்டினைத் தழுவியவையாகவே உள் ளன இந்நாடுகள் முன்னொரு காலத்தில் இந்துப்பண்பாட்டினையும் தழுவி வளர்ச்சி பெற்றிருந்தமையை தொல்லியற் சான்றுகள் உறுதிப்படுத்துகின் றன. குறிப்பாக புர தன -மத்திய வாலாற்றுக் காலப்பகுதியில் இந் நாடு சளின் பண்பாட்டு வளர்ச்சியானது இந்துப் பண்பாட்டின் அடிப்படைகளைக் கொண்டிருந்தது. இப்பண்பாட்டுச் சூழல் இந்திய பெருநிலப் பரப்பிலிருந்து தென் கிழக்காகவுள்ள தீவக. தீவகக் குறை நிலப்பரப்புக்களுக்கு மேலாக காலத்துக்குக்காலம் பரந்து விரிந்து செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தது. இச் செல்வாக்கினைச் சுட்டுவதற் தப் பொது வாக பரந்த இந்தியா, அல்லது அகன்ற இந்தியா என்ற பதங்களை இந்தியப் பண்பாட்டு வரலாற்று ஆசி ரியர்கள் பயன்படுத்துவர். இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்ற பதங் கள் இன்றைய நிலையில் தென்கிழக்காசியப் பண்பாடு பொறுத்து வலு இழந்து கொண்டிருக்கின்ற நிலையையும், தென் கிழக்காசிய வரலாற்றாசி ரியர்கள் அச்சொற்பதங்களைக் கையாளுகின்ற நிலையில் இருந்து விலகியுள்ளனர் என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. இதுவே தற்காலப் பண்பாட்டு வரலாற்று நோக்கில் தென்கிழக்காசியா மீதான இந்துப் பண்பாட்டுச் செல்வாக்கினைப் பற்றிய சில பிரச்சினைகள் தோற் றம் பெறுவதற்குக் காரணமாகியது.