dc.description.abstract |
உபநிடதங்களின் பிழிசாறான அறிவுரை யாது என்ற வினாவிற்கு விடை தேடும் முயற்சியில் முகிழ்ந்ததே வேதாந்தம் என்ற மெய்யியற் போக் காகும். இதற்குரிய முதல் நூலாக பாதராயணர் என்பாரின் பிரமசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் எனப்பெயர் பெறும் சூத்திரத் தொகுதி யொன்று வியாஸர் என்பாரால் (வியாசர் = ஒழுங்கு செய்பவர்) தொகுக் கப்பட்டுள்ளது. பாதராயணரின் முதல் நூல் கி. பி. நாலாம் நூற்றாண் டைச் சேர்ந்தது. பிரமசூத்திரம் மறைபொருளான அர்த்தங்களைக் கொண் டதனால், சூத்திரப் பொருள் யாது என்பதில் தோன்றிய கருத்துவேறுபாடு கள் பல்வகை வேதாந்த தரிசனங்களின் தோற்றத்திற்கு வித்திட்டன. பிரம சூத்திரத்திற்கு உரைகண்டோரில் சங்கரர், இராமாநுஜர், மத்துவர்.
கண்டர் என்போர் முக்கியமானவர்கள். இவர்களில் சங்கரரின் உரை அத்வைதம் என்ற வேதாந்த தரிசனத்தையும், இராமானுஜர், மத்துவர் ஆகியோர்களின் உரைகள் விசிஷ்டாத்வைதம் என்ற வேதாந்த தரிசனத் தையும், ஸ்ரீகண்டரின் உரை சிவாத்வைதம் என்ற தரிசனத்தையும் தோற் றுவித்தன.
சங்கரர் பிரமசூத்திரத்திற்கு மெய்யியலான விளக்கத்தை தனிமு தற்பொருளான பிரமத்தை ஆதாரமாகக் கொண்டு தந்தவர். கடவுள் கொள்கை சார்ந்த விளக்கத்தை அளித்தவர்களில் பிந்திய மூவரும் குறிப் பிடத்தக்கவர்கள். இராமானுஜரும் மத்துவரும் விஷ்ணுவை முதன்மைக் கடவுளாகக் கொண்டு பிரமசூத்திரத்திற்கு உரைகண்டனர். ஸ்ரீகண்டரோ சிவனைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு பிரமசூத்திரத்திற்கு உரை செய்தார். தனிமுதல் பற்றிய மெய்யியற் கொள்கையை கடவுட் சார்பு டைய தனிமுதல்வாதமாக விளக்கமுயன்றமையே பிந்திய மூன்று உரை காரரதும் சிறப்பியல்பாகும்.
இவர்களில் இராமானுஜரும், மத்துவரும் வைஷ்ணவ சமயநிலை நின்று விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ கண்டர் சைவசமய நிலை நின்று சிவாத்துவிதத்தை நிலைநிறுத்த முயன்றவராவர்.
மெய்யியற்துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய இலர் சமூகவிஞ்ஞானங்களின் முறையியல் பற்றி தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டவர். விமரிசன மெய்யியல். தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்ற இரு நூல்களின் ஆசிர் யராவர். |
en_US |