DSpace Repository

நிலவளமும் நிலப்பயன்பாடும்

Show simple item record

dc.contributor.author Balachandran, S.
dc.date.accessioned 2022-11-09T08:03:21Z
dc.date.available 2022-11-09T08:03:21Z
dc.date.issued 1983-03
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8445
dc.description.abstract நிலவளமும் நிலப்பயன்பாடும் எந்தளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவை? நிலம் வளமாக இருந்துவிட்டால் அந்த நிலம் நிலப்பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிடுமா? இங்கு நீரின் தேவை எந்தளவுக்கு அவசியமாகின்றது? நிலத்தைப் புரிந்துகொள்வதில் குறிப்பிட்ட நிலத்தில் வாழும் மக்கள் எத்தகைய தொழில் நுட்ப அறிவு கொண்டுள்ளார்கள்? இத் தொழில் நுட்பம் எத்தகைய காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது? இக் காரணிகள் உண்மையிலேயே சர்வ தேச தரத்தைக் கொண்டுள்ளனவா? என்ற பல தொடர்ச்சியான வினாக்கள் உருவாகியுள. இவற்றுக்கு விடைகள் சரியாக அமைகின்ற போது நிலவளம் உண்மையிலேயே பாவனைக்கு உள்ளாகின்றதா என்பது தெளிவாகின்றது. இலங்கையைச் சிறப்பாகக் கருத்திற்கொண்ட கிராம சமுதாய அபிவிருத்திக்கான உபாயங்கள் அல்லது திறமுறைகளை (Strategies) ஆராய்வதில் நிலவளமும் அதற்குரிய நிலப்பயன்பாடுபற்றிப் புரிந்து கொள்ளும் திறனும் மிக் முக்கியமானவை. அதேபோன்று கிராமத் துக்கும் நிலத்துக்கும் உள்ள தொடர்பு எந்த நிலையில் உளது என் பதுபற்றி நோக்குதலும் அவசியமாகின்றது. நாம் எல்லோரும் அறிந்தது போல எமது நாட்டு மக்களில் 70% மானோர் கிராமத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் நகரவாசிகளும் கூட நிலத்தையே தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் சில சமயங்களில் உடுபுடவைக்கும் நம்பியுள்ளார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும். எமது ஜனாதிபதி J. R. ஜயவர்த்தனா அவர்கள் அண்மையில் இது பற்றிக் கூறும் போது 'The future of this country is in the rural sector We must modernize and make it productive and pleasant'' (Resource Development. 1978 - 82: 1983) என வலி யுறுத்துகின்றார். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title நிலவளமும் நிலப்பயன்பாடும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record