DSpace Repository

பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும்

Show simple item record

dc.contributor.author Sittampalam, S.K.
dc.date.accessioned 2022-11-09T08:00:57Z
dc.date.available 2022-11-09T08:00:57Z
dc.date.issued 1983-03
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8444
dc.description.abstract நம் நாட்டின் வரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய வரிவடி வத்தைப் பிராமி வரிவடிவம் என அழைப்பது வழக்கம். இவை பெரும்பாலும் குகைகளில் அமைந்ததால் பிராமிக்குகைக் கல்வெட்டுக் கள் எனவும் பெயர் பெற்றன. கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பெளத்தத்தின் வருகையோடு இந் நாட்டில் செல்வாக்குப் பெற்ற இவ் வடிவம், பிற்காலத்தில் சிங்கள மொழி வளர்ச்சியில் பெரும் பங்குகொண்ட பிராகிருத மொழியான பாளி மொழியில் அமைந்திருந்ததால் இந்நாட்டில் சிங்கள இனத்தின் வருகையை எடுத்துக்காட்டும் பிரதான சான்றுகளில் ஒன்றாகவும் இற்றைவரை கருதப்பட்டு வருகிறது. பௌத்தமத நூல்களாகிய தீபவம்சம், மகா வம்சம் ஆகியவை கூறும் விஜயன் கதையே இந்நாட்டில் சிங்கள மக்கள் குடியேறிய வரலாற்றுப் பின்னணி என நம்பிய கெய்கர் ( Bchert, 1960), பரணவித்தான (Ray , 1959) ஆகியோர் வழிவந்த வரலாற்று அறிஞர்களும் இக்கல்வெட்டுக்களைச் சிங்கள மக்களின் பழமைக்கு ஒரு சான்றாகவே கொள்ளுகின்றனர். ஆனால், புகழ்பூத்த வரலாற்று அறிஞரான மெண்டிஸ் (Mendis, 1965; இவ்விஜயன் கதை ஒரு கட்டுக்கதை ! Legend) என எடுத்துரைத்தும் கூட இக்கல்வெட் டுக்களை வடநாட்டிலிருந்து சிங்கள மக்கள் ஈழம் நோக்கிக் குடி பெயர்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றாகவே கருதினர். அனால். தொல்லியல் நோக்கில் ஈழவரலாற்றையும் மகாவம்சம் கூறும் விஜ யன் கதையையும் அராய்ந்த சேனரத்தின (Senaratne, 1969) வட நாட்டி லிருந்து சிங்கள இனம் இங்கு குடிபெயர்ந்ததற்கு எவ்வித சான்றும் இல்லை என எடுத்துக்காட்டினார். இவரைத் தொடர்ந்து அண்மையில் குணதிலகா ( Goonatilleke, 1980) இந் நாட்டின் வரலாற் றுக்கால நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் வெறும் கற்பனையி லுள்ள விஜயனும் அவன் கூட்டத்தினருமல்ல என்றும், தென்னிந்தி யாவைப் போன்று பெருங்கற்காலப் பண்பாடே (Megalithic culture) என்றும் எடுத்துக்காட்டி உள்ளார். சுருங்கக் கூறின் ஈழ நாகரிகத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது பெருங்கற்காலப் பண்பாடே எனலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record