Abstract:
காலத்திற்குக் காலம் சூழல் மாறுவது வரலாறு காட்டும் உண்மை என்பர். காலஞ் செல்லச் செல்லச் சூழல் மாறுவது நியதி என்பதல்ல இதன் பொருள். சூழல் மாறுவதினாலேயே வரலாற்றுக் காலகட்டங்களென வகுக்கிறோம். கால உணர்வு அவ்வாறே தோன்று கிறது. நிகழும் சம்பவங்கள் வாயிலாகவே முன்னது பின்னது எனும் உணர்வு எழும்.
இன்னொரு கோணத்திலிருந்து அனுபவ ஆய்வினை அணுகும் போது காலம் (Time), வெளி (Space) எனும் ஒழுங்கு முறையை முற் கற்பிதமாகக் கொண்டாலன்றி அனுபவத்திற்கே இடமில்லையெனக் கருதப்படுகின்றது. "நேற்றுக் காலை பண்ணைப் பாலத்தில் குண்டு வெடித்தது'' என்று கூறும் போது குண்டு வெடித்தது என்பது மட்டுமே நிகழ்ந்த சம்பவம். எப்போது, எங்கே யெனும் கேள் விகளுக்கு விடை தேடுமுகமாக ''நேற்றுக் காலை', ' பண்ணைப் பாலத்தில்'' எனும் தரவுகள் எழுந்து குண்டு வெடித்த சம்பவத்தைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றன. யாரால், எவ்வாறு எனும் வினாக்களும் எழுந்தால் சாதாரண அல்லது விஞ்ஞான ரீதியான ஆய்வும் முழுமை பெற்று விடும் எனக் கொளலாம்.
இவையாவும் ஏன் எனும் விசாரணைக்குப் போதாதென்றே கூற வேண்டும் . யாரால் அல்லது யார் நிமித்தம் என்பதும் ஏன் என்பதும் வெவ்வேறு அறிவு அளவைகளைக் கொண்டவை. சமூக வாழ்க்கை யில் அரசாட்சியின் சட்ட ஒழுங்கிற்கும் அறம் நிலை நாட்ட முயலும் ஒழுங்கிற்கும் முற்கூறிய ஆய்வோடு 'ஏன்' எனும் விசாரணையும் அவசியமாகின்றது.