Abstract:
சமயம் சமூகப் பாரம்பரியத்தின் முக்கிய கூறாகும். சமூக வர லாற்றிலும் சமயம், முக்கிய பங்கு கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வகையில் சமயம் தனி மனித, சமூக நடவடிக்கைகளை நெறிப் படுத்தியும் இந்நடவடிக்கைகளால் நெறிப்படுத்தப்பட்டும் வந்துள்ள தைக் கண்டுணரமுடியும். பெரும் சமய இயக்கங்களும் சமய தத் துவங்களும் சமூகத்தில் நடைபெறும் முக்கிய மாற்றங்களின் தத்து வார்த்த வடிவங்களாகக் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் பல்லவ ராட்சிக்காலத்தில் நிகழ்ந்த பக்தியியக்கம் நிலவுடமையின் எழுச்சி யுடன் இணைந்திருந்தது. வட இந்தியா விற் பிராமணிய மேலாதிக் கத்தை எதிர்த்தோரின் தத்துவ வடிவமாகவே பௌத்தம் தோன்றி யது. கிறித்தவ புரொட்டஸ்தாந்து மதத்திற்கும் ஐரோப்பாவின் நிலமானியச் சிதைவிற்கும் தொடர்பிருந்தது. இவ்வுதாரணங்கள் சமயத்தின் சமூகவியலைச் சுட்டப் போது மானவை. சமயத்தில் காணப்படும். வளர்ச்சியும் மாறுதலும் அடையும் நெகிழ்ச்சியால் தான் அது பாரம்பரியத்தில் தன்னை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தும் வலுவையும் பெறுகிறது.
தமிழர் சமயப் பாரம்பரியம் நீண்டதோர் வரலாறு டையது. புராதன இயற்கைப் பொருள் வழிபாட்டிலிருந்து இன்றைய சாயிபாபா வணக்கம் வரை இதனுள் அடங்கும். எனினும், இக்கட்டுரையில் தேவையும் பொருத்தமும் கருதி தமிழர் சமயப் பாரம்பரியத்தின் ஒரு பிரிவில் - அதாவது அதிகாரபூர்வமான சமயப் பெரும் பாரம் பரியத்தின் பின்னணியில் நாவலரை மதிப்பிட முற்படுகிறேன். இவ் விடத்தில் சமயப் பாரம்பரியத்தின் இருபோக்குகளைக் குறிப்பிடுதல் தகும். நீண்ட வரலாறுடைய சமூகங்களின் சமயம், பண்பாடு ஆகியவற்றில் இரு போக்குகள் செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று உயர் சமூகத்தினர் சார்ந்தது. அதிகாரச் சார்பானது, மற்றது சமூகத்தில் பொதுசனமட்டம் சார்பானது; ஜனரஞ்சகமானது. இத னையே சமூகவியலாளர் உயர்பாரம்பரியம், உபபாரம்பரியம், பெரும் பாரம்பரியம், சிறுபாரம்பரியம் முதலிய தொடர்களால் அழைப்பர். இத்தன்மை பற்றிப் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சன் பின்வருமாறு கூறுவர்: