Abstract:
கிராமியப் பகுதிகள் என்று கருதப்படுபவை நகரப்பகுதிகளி லிருந்து வேறுபட்டனவாகவும், விவசாய நடவடிக்கைகளாற் சூழப் பட்ட பரவலான குடியிருப்புக்களைக் கொண்டனவாகவுமே இன்று பொதுவாகக் காணப்படுகின்றன. எனினும், கிராமியப் பகுதிகளி னிடையே இன்று கிராமிய நகரங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் கிராமிய சமுதாயத்தைத் தனியானதொரு நிலையில் வைத்து அதன் விருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்ளல் தவறான தாகும். அதாவது கிராமியப் பகுதிகள் நகரப்பகுதிகளிலும் நகரப்பகுதிகள் கிராமியப் பகுதிகளிலும் இன்று தங்கியுள்ளன.
கிராமிய சமுதாய விருத்தி என்னும் கோட்பாட்டில் கிராமிய சமுதாயத்தினரின் நலனைப் பேணலே அடிப்படையாகக் கொள்ளப் பட வேண்டியதாகும். எனினும், கிராமியப் பகுதிகளில் சுகாதார வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதை மட்டும் இது கரு தாது. இப் பாகங்களில் கிடைக்கக்கூடிய முழுமையான பௌதிக, மனித வளங்களை உச்ச நிலைப் பயன்பாட்டில் ஈடுபடுத்தும் நோக் குடையதொன்றாக அமைதல் வேண்டும்.
கிராமிய சமுதாயத்தில் பயிர்ச்செய்கை மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதனால் விவசாய விருத்தியும் கிராமிய விருத்தியும் ஒன் றென சில சந்தர்ப்பங்களில் எண்ணப்படுவதுண்டு. அதாவது கிரா மியப் பகுதிகளில் பாரிய விவசாய நடவடிக்கைகளிலும் குறிப்பாக ஏற்றுமதிக்கான பயிர்ச் செய்கையிலும் விருத்தி ஏற்படும் அதே நேரத்தில் கிராமிய மக்களின் வாழ்க்கை நிலையில் வீழ்ச்சி ஏற்படு வதையும் வருமான ஏற்றத்தாழ்வுகளில் வேறுபாடு அதிகரிப்பதையும் காணக்கூடியதாயிருக்கின்றது. இதனால் கிராமியப் பகுதிகளில் முன் நிற்கும் சில துறைகளை மட்டும் விருத்தி செய்வதன் மூலம் கிராமிய விருத்தியினை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், இத்தகைய துறை களில் குறிப்பாகப் பயிர்ச் செய்கைத்துறை இயற்கையில் பெருமள வுக்குத் தங்கியிருந்தாலும், இதனுடன் தொடர்பான பொருளாதார நடைமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுதலும் இங்கு குறிப் பிடத்தக்கதாகும். இவற்றின் உற்பத்தி அளவு ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுவதுடன், மனிதக் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டது.