Abstract:
'நாட்டார் வழக்காற்றியல்' (Forkloe) என்ற புலமைத்துறை இன்று அனைத்துலகக் கல்விப்புலமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் பல்வேறு இனங்களும் தத்தமது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை நாட்டார் பண்பாட்டுக் கூறுகளில் இனங்கண்டு மீட்டுருவாக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆய்வுக்கட்டுரையானது பெயர்களுடன் தொடர்புடைய வழக்காறுகளில் மிகவும் முக்கியத்துவமான ஒரு கூறாக விளங்கும் பட்டப்பெயர்கள் உருவாக்கம் பெறும் அடிப்படைகள் குறித்து ஆராய்வதாக அமைகிறது.