Abstract:
மத்திய காலத்து ஈழத்து வெண்கலப்படி மக்கலைவரலாற்றில் பௌத்தமும் இந்து மதமும் சமத்துவமான செல்வாக்கினை செலுத்தியிருந்தமையை அண்மைய காலத்துத் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. சமுத்திரவியல் செல்வாக்கிற்குட்பட்டிருந்த இத்தீவினது கலைக்கூடங்களில் இவ்விருமதங்களினாலும் உருவாக்கப்பட்டிருந்த கலைக்கோலங்கள் தனித்துவமான வகையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவ்வழியே பொலனறுவையில் உருவாக்கப்பட்டிருந்த சைவநாயன்மார் வெண்கலப்படி மங்களும் ஈழத்திற்கேயுரிய கலை மரபினை இனங்காண்பதற்குரிய ஓர் ஊடகமாக அமைந்து கொண்டமை பற்றியே இச்சிறிய கட்டுரை ஆராய்கிறது.