dc.description.abstract |
அறிவியல் ரீதியில் நோக்கும் போது சமூகத்தின் அதி உயர் கல்வி நிறுவனமாக இருக்கின்ற பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வுத் தேவைக்கு அதிகமாக உதவுபவை முதல் நிலைத் தகவல் வளங்களே. எனினும் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது வளர்ச்சியடைந்த தேசங்களின் ஆய்வு முயற்சிகள் அதிக பொருட்செலவில் தரம் மிக்க நூல்கள், ஆய்வறிக்கைகள், பருவ இதழ்கள் போன்ற வடிவில் எமது நூலகத்தை வந்தடைகின்ற அதே சமயம், வெளியீட்டுக்கான வாய்ப்பின்றி அல்லது வெளியீட்டுச் செலவை ஈடு கட்டும் வாய்ப்பின்றி பெறுமதி மிக்க முதல்நிலைத் தகவல் வளங்கள் சர்வ தேச தராதரத்துக்கு ஏற்ப பதிப்பிக்கப்படாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளாக, செய்தித் தாள் கட்டுரைகளாக, சிறுநூல்களாக, சிறப்பு மலர்க் கட்டுரைகளாக இலை மறை காயாக இருக்கும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆய்வு முயற்சிகளையும் அதன் முக்கியத்துவத்தையும், அவை பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஓரளவேனும் வெளிக்கொணர இக்கட்டுரை முயல்கிறது. |
en_US |