Abstract:
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட வரலாற்றைக் கொண்டது. தீர்வுக்காக முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு உடன்பாடுகளும் தந்திரமான அரசியல் கையாளுகைக்கான திட்டமிடல்களாக மட்டுமே அமைந்திருந்தன. இக்கையாளுகை அரசியல் இனங்களுக் கிடையிலான தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்து முரண்பாட்டுக்கும், பிரிவினைக்கும் வித்திட்டன. இம்மாறுதலின் வளர்ச்சிக்கட்டத்தில் மீண்டுமொரு சமாதான அரசியலும். உடன்பாடும் உருவாகியதுடன் தேசீய ஒருமைப்பாடு பற்றிய சிந்தனை முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது.