dc.description.abstract |
யாழ்ப்பாணத்துக் கோயில் கட்டடக்கலை பற்றிய வெகுசன நம்பிக்கைக்கும், நடை முறைக்குமிடையிலுள்ள முரண்பாட்டைக் கட்டுடைப்பதனூடாக யாழ்ப்பாணத்து கோயில் கட்டடக் கலையின் தனித்துவத்தையும், இயங்கியலையும் நிறுவ முயல்கிறது இக்கட்டுரை. முகமண்டபங்களை மையமாகக் கொண்ட இந்த வாசிப்பு அண்மைக் காலமாக பிரபல்யமடைந்து வரும் வில்லுமண்டபங்களை அவற்றின் பண்பாட்டு அசை வியக்கத்தில் சூழமைக்க முயல்கிறது. இந்த முகமண்டபங்களை விழாத் தேவைகளுக்காக அமைக்கப்படும் தற்காலிக பந்தல் அமைப்புகளின் அழகியலின் நிரந்தர ஊடகங்களிலான நிலை மாற்றமாக இக்கட்டுரை வாதிக்கிறது. அத்துடன் இக்கோல நிலை மாற்றத்தைத் தீர்மானிக்கும் மரபு. வெளிச்செல்வாக்கு, பொருளாதாரம், போஷகரின் நிலை, கலைஞர்களின் நிலவரம், ஊடக சாத்தியப்பாடு மற்றும் கருத்து நிலை என்பனவற்றை திரை விலக்குகின்றது. |
en_US |