Abstract:
கல்வி முறைகள் நாட்டினுடைய பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்படுவது போலப் பண்பாடும் நாட்டின் கல்வி முறையோடு தொடர்பு பட்டு வளர்ந்து வந்துள்ளது. பண்பாட்டிற்கும் கல்விக்கும் இடையில் உள்ள தொடர்பு மிகப்பழமையானது என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. நவீன கல்விச்சிந்தனைகளும் பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்துகின்றன. கல்வியின் மூலம் அறிவினை மட்டும் வளர்ப்பதை நோக்கமாகக் கொள்ளாது ஒருவனுடைய மானுடப் பண்பும் மேலோங்கிச் செல்ல வேண்டுமென்பதை இவ் ஆய்வு எடுத்துக்காட்டுகின்றது.