Abstract:
இந்துக் கடவுளர் தொகுதியானது விஷ்ணு , சிவன், சக்தி, சூரியன் மற்றும் கணேசர் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 'பஞ்சதேவசபை' என அழைக்கப்படுவதனைக் காணலாம். இந்துக் கடவுளரது உருவங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பானர்ஜி, பட்டாச்சார்ஜி ஆகியோரும் இப்பிரிவுகளைப் பின்பற்றியுள்ளனர். இலங்கையில் கிடைத்த இந்துக் கடவுளர்களது சிறப்பம்சங்களைப் பகுத்தாய்வு செய்யும் போதும் இப்பிரிவு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் பொருத்தமாகப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பகுதியையும் ஆரம்பமாகக் கொண்டு அவற்றோடு தொடர்பான ஏனைய உப தெய்வ சிற்பங்களையும் பற்றி ஆராய்ந்து கொள்ள முடியும். அதாவது விஷ்ணு படி மத்துடன் தொடர்பான கருட, மற்றும் அனுமான் உருவங்களைப் பற்றியும், சிவனது வணக்க முறைகளுடன் தொடர்புள்ள மற்றைய கடவுளர்களதும், சிவனடியார்களதும் சிற்ப உருவங்களைப் பற்றியும் நோக்க முடியும். ஆனால் இவ்வாய்வுக் கட்டுரையின் கண் விஷ்ணுவினை முதன்மையாகக் கொண்டுள்ள வைஷ்ணவப் படி மக்கலை மரபு பற்றியே ஆராயப்படுவது முதன்மையான நோக்கமாகவுள்ளது.