Abstract:
இராமகிருஷ்ண பரமஹம்சர் முறையான கல்வி எதனையும் பெற்றிராதவர். அவர் வாய் மொழி வடிவத்தில் உருவகக் கதைகளாக அமைத்த படிமங்களாகத் தனது மெய்யியற் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இம்மெய்யியற் சிந்தனைகள் மனித குலத்திற்கு புதிய தொரு வாழ்வுக் கலாசாரத்தினைப் போதித்தன. அத்தகைய சிந்தனைகள் பற்றிய ஆய்வுத் தொகுப்பாக இவ்வாய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.