dc.contributor.author | Prakash, R. | |
dc.date.accessioned | 2022-10-27T06:41:33Z | |
dc.date.available | 2022-10-27T06:41:33Z | |
dc.date.issued | 2017 | |
dc.identifier.issn | 2478-1061 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8335 | |
dc.description.abstract | இலங்கையில் இந்து ஆலயங்கள் பக்தி நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே பட்சத்தில் கலை வெளிப்பாடுகளை கட்புலக்கலை வடிவங்களினுாடு எடுத்துக்காட்டுவதற்கான கலைக் கோயில்களாகவும் விளங்குகின்றன. தொன்மையான வேர்களைக் கொண்ட ஒரு தனித்துவ கண்ணோட்டத்தை வழங்கும் கண்கவர் கலைப்படைப்புக்களை பிரதிபலிக்கும் கலைக் களஞ்சியமாக இந்துக் கோயில்கள் விளங்குகின்றன. இலங்கையில் எண்ணிக்கையில் அதிகமான இந்து ஆலயங்களைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொன்மையான இந்து ஆலயங்களின் கட்புல கலை வெளிப்பாடுகள் இனங்காணப்பட்டு இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. புராதன இந்து ஆலயங்களின் கட்புல கலை வெளிப்பாடுகள் பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளுடன் இணைந்ததான தன்மையை மெய்ப்பிக்கின்றன. தென்னிந்திய திராவிடக் கலையின் வீச்சு அதிகமாக இந்து ஆலயங்களின் கட்புலக் கலை வடிவங்களில் பிரதிபலிக்கின்றது. அத்துடன் இங்கு சமகாலத்திய கட்புலக் கலைகளில் அதிநவீன நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பழமைகள் புறந்தள்ளப்படும் போக்கினையும் இனங்காண முடிகிறது. திராவிட மரபுகளில் ஊடக ரீதியான வேறுபாடுகள் மற்றும் தொழில்நுட்பம் முதலியவற்றின் ஊடாக கட்புலக்கலைகள் புதிய அவதாரங்களை எடுத்திருக்கின்றமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும். | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | கப்புலக்கலை | en_US |
dc.subject | திராவிடக்கலை | en_US |
dc.subject | கர்ப்பக்கிரகம் | en_US |
dc.subject | விமானம் | en_US |
dc.subject | கோபுரம் | en_US |
dc.subject | தூண்கள் | en_US |
dc.title | இந்துக் கோயில்களில் கட்புலக்கலை வெளிப்பாடுகள் - யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துக் / கோயில்களை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |