Abstract:
சம்ஸ்கிருதகாவியவியல் நூல்களுள் குவலயானந்தம் அதிக எண்ணிக்கையான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை விளக்கியுள்ளது என்பதை ஒப்பீட்டு ரீதியில் நிறுவுதலை நோக்காகக் கொண்ட இவ்வாய்வானது விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாத்ருஸ்யகர்ப்ப வகை சார்ந்த ஒற்றுமைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட அலங்காரங்களாக முப்பத்தியொரு அலங்காரங்கள் கூறப்படுகின்றன. அவையாவன உபமா, உபமேயோபமா, அநன்வய, ஸ்மரண , ரூபக, பரிணாம , ஸந்தேஹ, ப்ராந்திமத், உல்லேக , நிஸ்ச்சய , அபஹ்னுதி, உத்பிரேஷா, அதிசயோக்தி, துல்யயோகிதா, தீபக, ப்ரதிவஸ்துபமா, த்ருஷ்டாந்த, நிதர்சனா, வயதிரேகா , ஸ ஹோக்தி. விநோக்தி, சமாசோக்தி, பரிகரா, ஸ்லேஷ, அப்ரஸ்துதப்ரசம்சா, அர்த்தாந்தரநியாஸ, பர்யாயோக்த, வ்யாஜஸ்துதி, ஹேது, அனுகூல, ஆஷேப் என்பனவாகும். இவற்றுள் நிஸ்ச்சய, அனுகூல ஆகிய இரு அலங்காரங்களைத் தவிர ஏனைய இருபத்தொன்பது அலங்காரங்களையும் குவலயானந்தம் விளக்குவதால் அதிக எண்ணிக்கையான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை குவலயானந்தம் வரைவிலக்கணப்படுத்தியுள்ளமை ஒப்பீட்டு ரீதியில் நிறுவப்பட்டுள்ளது.