Abstract:
மிக நீண்ட காலமாக இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டிருந்த நகர நாகரிக வாழ்வின் அடியாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த இந்திய சமய முறையானது இந்தோ - கங்கைப்பள்ளத்தாக்கில் இரண்டாவது தடவையாக நகரமயமாக்கல் முறையினை உருவாக்கித்தந்த இந்தோ - ஆரிய இனமக்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கவில்லை என்பதனை இவ்வாய்வுக் கட்டுரை உறுதிப்படுத்த முயல்கின்றது. ஆனால் திராவிடர் - ஆரியர் என்ற இனவேறுபாட்டினை மட்டும் மையப்படுத்திய வகையில் இந்துநதிப்பள்ளத்தாக்கு நாகரிக வாழ்வின் வீழ்ச்சிக்கும், முடிவுக்கும் ஆரியர் படையெடுப்புக்கள் காரணமா அமைந்திருந்தன என்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்களை இருக்கு வேத கால பாசுரங்களில் இடம்லற்றுள்ள வரலாற்றுச் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை மறுதலிக்க முயல்கின்றது. இருக்குவேத சமய பாசுரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புக்களை சிந்துவெளியில் தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களுடன் ஒப்பிட்டு சிந்துநதிப் பள்ளதாக்கு மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இன்னொரு கட்ட பண்பாடே இருக்கு வேத கால இந்துதோ - கங்கைப் பள்ளத்தாக்கு வாழ்க்கை முறையாகும் என இக் கட்டுரை உறுதிப்படுத்துகின்றது. சிந்துவெளி நகர வாழ்விற்கும் வேத கால நாகரிக வாழ்விற்கும் தொடர்பே இல்லையென்று இருந்த காலகட்டம் இன்று விலகி, சிந்து வெளி நாகரிக மக்களின் சமய - சித்தாந்த - தத்துவார்த்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு திறவுகோலாக இருக்கு வேதபாசுரங்கள் இன்று கையாளப்பட்டுக்கொண்டு வரப்படுவதனை பரவலாக காணமுடிகிறது. இக் கருத்தோட்டத்தினை நிறுவுவதாகவே இவ் ஆய்வுக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.