Abstract:
இலங்கையின் வடக்கே வட மாகாணத்தின் மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தெற்குப் புறமாக கரைச்சிப் பிரதேசமானது அமைந்துள்ளது. இது 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தவகையில் ஆய்விற்கெனத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் கரைச்சிப் பிரதேசத்திலுள்ள வட்டக்கச்சி கிராமமாகும். இங்கு எளிய வீதாசார படைமுறைமுறை மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்ட்ட 3 குடும்பங்களுக்கே வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சார்ந்த மாறியாக வேலைவாய்ப்பும் சாராத மாறிகளாக கல்வித்தரம் மற்றும் வயது மாறிகளும் காணப்படுகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்தரம் என்பவற்றுக்கிடையிலான இணைவானது 52% ஆகக் காணப்படுவதுடன் வேலைவாய்ப்பு மற்றும் வயது என்பவற்றுக்கிடையிலான இணைவானது 41% ஆகவும் காணப்படுகின்றது இவற்றிற்கிடையிலான தாக்கமானது முறையே 51%,88%மாகக் காணப்படுகின்றது என்பதனையும் எடுத்துக்காட்டுவதுடன் இவற்றிற்கிடையிலான P-value 0.000 என்பதாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் ஆய்வுப்பிரதேசத்தில் வேலை வாய்ப்பிற்கும் கல்வித்தரத்திற்கும் இடையே நேரான தொடர்பு காணப்படுகின்ற அதே நேரம் வேலைவாய்ப்பினைப் பற்றுக்கொள்வதில் வயது என்பது எதிரான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது.