dc.description.abstract |
வடமாகணத்திலேயே அதிக உயிர்ப்பல்வகைமையைக் கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. இதில் மடு, கட்டுக்கரை வங்காலை ஆகிய மூன்று பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வங்காலை பறவைகள் சரணாலயமானது அதன் உயிர்ப்பல்வகைமையின் செழுமை கருதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக "ரம்ஸார் உடன்படிக்கையினுாடாக 200ல் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறான முக்கியத்துவம் லற்ற பகுதியின் நிலைத்திருக்க கூடிய முகாமைத்துவ செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இச்சந்தர்ப்பத்தில் சரணாலயத்தின் நிலைத்திருக்கும் முகாமைத்துவ செயற்பாடு தொடர்பாக மக்களின் செயலாற்றல் , மனோநிலை, வேறுபட்ட அரச நிறுவனங்களின் செயற்றிட்டங்கள் என்பனவற்றினுாடாக சூழல் நிலைத்திருப்பில் எவ்வாறான சவால்களை எதிர் நோக்குகின்றது, என்பது பற்றி அறியும் நோக்கில் சரணாலய எல்லை நிர்ணயம் தொடர்பாக சரணாலய எல்லைக்குள் உள்வாங்கப்பட்ட தனிநபர் காணி உரிமையாளர்கள் அனைவரிடமும் நோக்க அடிப்படையிலான மாதிரி எடுப்பு முறை மூலம் திரட்டப்பட்ட தகவல்களையும் வேறுபட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமிருந்தும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம், சூழற்பாதுகாப்பு தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்த செயலாற்றல் என்பது ஏற்படுத்தப்படாமையும் மற்றும் சூழல் முகாமைத்துவ செயற்பாடுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படாமை, மக்கள் குழுக்களை இணைத்துக் கொள்ளாமை போன்றன சரணாலய நிலைத்திருப்புக்கான சவால்களாக கண்டறியப்பட்டதுடன், சரணாலய எல்லை தொடர்பாக மக்களின் கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு அதே வேளை சரணாலய உயிர்ப்பல்வகைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான எல்லை நிர்ணயம் தொடர்பான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |