Abstract:
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது வேறான புவியியல் பண்புகளைக் கொண்ட வடமாகாணத்தின் நுண்காலநிலை வேறுபாடுகளை அறிவது எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இன்றியமையாதது ஆகும். வடமாகாண நுண் காலநிலை வேறுபாட்டை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுக்கு வட மாகாணத்தின் வேறுபட்ட நிலையங்களில் அளவீடு செய்யப்பட்ட வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சராசரி நியம விலகல் மற்றும் நியமமாக்கப்பட்ட படிவு வீழ்ச்சி குறிகாட்டி முறைகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்ட முடிவுகள் புவியியல் தகவல் தொழிநுட்ப முறையைப் பயன்படுத்தி (தலைமுறை 10.1) பரவலாக்கல் படங்கள் பெறப்பட்டன. வடமாகாணத்தின் மேற்குப்பகுதி வெப்பநிலை சராசரியை விட 0.850 உயர்வாகவும் கிழக்குப் பகுதி வெப்பநிலை வடமாகாண சராசரியை விட 0.32 'C குறைவாக காணப்படும் அதேவேளை தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று காலத்தில் வடமாகாணம் முழுவதும் (0.75'C வெப்பநிலை உயர்வாகக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி மழைவீழ்ச்சியானது மேற்குப்பகுதியை விட 160mm உயர்வாகக் காணப்படுகின்ற அதேவேளை வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்திலும் இரண்டாவது இடைப்பருவ காலத்திலும் வடமாகாணமானது மழைவீழ்ச்சியின் 88%இனைப் பெறுகின்றது. இத்தகைய நுண்காலநிலை வேறுபாடுகள் இடம் மற்றும் காலம் சார்ந்து காணப்படுவதால் அவை அவ்வப் பிரதேச வானிலை மற்றும் காலநிலையில் வேறுபாடுகளைத் தோற்றுவிப்பதால் பிரதேச அபிவிருத்தித் திட்டமிடலில் பல சவால்களைத் தோற்றுவிக்கின்றன.