Abstract:
மட்டக்களப்பு மாவட்டமானது 14 பிரதேச செயலக பிரிவுகளையும் 345 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மொத்த மீனவ சனத்தொகை 25726 ஆகும். இங்கு மொத்தமாக 20,726 மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றனர் (District Fishrs oflice - Ballicalao 2014.). இவ்வாய்விற்கான தரவுகளும் தகவல்களும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவு மூலகங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார் முறைகளினூடாகப் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் புள்ளிவிபரவியல் முறையினைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் தொகுத்தறி முறையினைப் பிரதானமாகவும் உய்த்தறி முறையினைத் துணையாகவும் கொண்டு பெறப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு அடுத்த படியாக மீன்பிடித்துறையினையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இம்மீன் பிடித் துறையானது இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றது. அந்த வகையில் இம் மீனவர்களின் மீன்பிடி உற்பத்தியானது இம்மாவட்ட மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றது. ஆனாலும் பெரும்பாலான மீனவர்கள் சந்தைப்படுத் தலில் ஏற்படுகின்ற பிரச்சினை காரணமாக பாரிய இழப்புகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாய்வின் பிரதான நோக்கமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற மீன்பிடி உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதாகும்.