Abstract:
தேசிய மட்டத்தில் பொதுக்கல்வி (தரம் 1- 12) செயற்பாடுகளை மதிப்பீடு செய்கின்ற பொதுப் பரீட்சைகளாக தரம் 5 புலமைப் பரீட்சை, க.பொ.த சாதாரணப் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சை ஆகியன காணப்படுகின்றன. பொதுக்கல்வி தொடர்பில் மாணவர்களின் அடைவுமட்டத்தை அளவீடு செய்வதற்கு இப் பொதுப் பரீட்சைகள் அடிப்படையாக அமைகின்றன. மேலும் பா - டசாலை அனுமதிகளுக்கும், உதவித்தொகை வழங்குவதற்கும், உயர்தரக் கல்வியை தொடர்வ - தற்கும், பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்குமான வரிசைப்படுத்தல்களை, தரப்படுத் - தல்களை, தெரிவுகளை மேற்கொள்வதற்கும் இப்பரீட்சைகள் முதன்மை பெறுவதை அவதானிக்க முடிகின்றது. இப்பரீட்சைகளினால் கல்விச் செயன்முறையில் போட்டி, வியாபாரப்போக்கு தனியார் மயத்தன்மை, ஏற்றத்தாழ்வு போன்றன அதிகரித்துள்ளமையையும் உணரக்கூடியதாக உள்ளன. வடமாகாணத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த சாதாரணப் பரீட்சை , க.பொ.த உயர் - தரப் பரீட்சை பெறுபேறுகளின் தற்போதைய நிலைமையை ஆராய்வதாகவும் அவற்றுக்கான பரிகார நடவடிக்கைகளை விதந்துரைக்கும் பிரதான நோக்கத்தைக் கொண்டதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது. வடமாகாண பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பிரதான தரவு சேகரிப்புக் கருவியாக பயன்படுத்தப்பட்டது. அளவைநிலை ஆய்வு அணுகுமுறை ஊடாக அறிக்கையின் புள்ளிவிபரங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் பெறுபேறாக ஏனைய மாக - ராணங்களுடன் ஒப்பிடுகின்ற போது பொதுப் பரீட்சைகளின் பெறுபேறுகளில் வடமாகாணம் பின்னடைவான நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டது. இறுதியில் ஆய்வின் பெறுபேற்றுக்கு ஏற்ப வடமாகாணத்தின் பொதுப்பரீட்சைகளின் அடைவுமட்டத்தை உயர்த்து வதற்கான பரிகார நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.