dc.description.abstract |
வடஇலங்கையினது பொருளாதாரத்தில் அதனது பிரதான வருமான மூலங்களிலொன்றாக புராதன காலந் தொடக்கம் ஏறத்தாழ நாடு சுதந்திரமடைந்ததன் பின்னராகவும் பனை மரமும் அது சார்ந்த பண்டங்களும் அமைந்திருந்தன. வறுமை, உணவுப் பஞ்சம் என்பன ஏற்பட்ட காலங்களில் வடஇலங்கை மக்களுக்குக் கற்பகதருவாக இருந்து அவர்களது பட்டினி வாழ்வினை அகற்றியது. நோயாளருக்கு மருந்தாகியது. ஆரியச்சக்கரவர்த்திகளது காலத்திலும் பின்வந்த ஐரோப்பியர்களுக்கும் பிரதான வர்த்தகப் பொருட்களாக இருந்து அவர்களுக்கு வருவாயினைப் பெற்றுக் கொடுத்தது. பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியது. உள்நாட்டில் மட்டுமன்றி அக்காலப்பகுதிகளில் அயல்நாடுகளிலும் இத்தகைய பொருட்களுக்குப் பெரும் கிராக்கியிருந்தது. அவ்வகையில் ஆரியச்சக்கரவர்த்திகளது காலத்தின் பின்னதாக இத்தகைய பனைமரத்தினது பெறுமதியினை உணர்ந்தவர்களில் ஐரோப்பியர்களான டச்சுக்காரர் சிறப்பிடம் பெறுகின்றனர். இவர்கள் இலங்கையின் கரையோரப்பகுதிகளை நிர்வாகம் செய்த காலப்பகுதியில் பனை மரத்தினை வடஇலங்கையில் உருவாக்குவதில் அக்கறை உடையவர்களாக இருந்ததுடன் இவற்றிலிருந்து அதிகளவான வருவாயினைப் பெற்றனர். இவர்களது காலத்தில் வடஇலங்கையினது நிர்வாகத்தினைத் திறம்பட நடாத்துவதற்குத் தேவையான பொருளாதார பலத்தினைக் கொடுத்த காரணிகளில் பனையும் ஒன்று குறிப்பிடத்தக்கது. ஆரியச்சக்கரவர்த்திகளது காலத்தில் பனையிலிருந்து அதனது உற்பத்தி மூலமாக அவர்கள் பயன் அடைந்தார்கள். போர்த்துக்கேயரது காலத்தில் அவர்கள் பிற வர்த்தகப் பொருட்களில் காட்டிய அக்கறையினை பனம் பொருட்களில் காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் டச்சுக்காரரோ பனை முழுவதிலிருந்தும் ஆதாயத்தினை அடைந்தனர். அவர்களது காலத்தில் உள்நாட்டுத் தேவையினைப் பூர்த்தி செய்தது மட்டுமன்றிச் சர்வதேச சந்தைகளுக்கும் பனையும் அது சார்ந்த பொருட்களும் அனுப்பப்பட்டன. பின்வந்த ஆங்கிலேயரும் டச்சுக்காரரது பனைமரம் தொடர்பான கொள்கையினைத் தொடர்ந்து சிலகாலம் கைக்கொண்டனர். இக்காலங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் பனை மரத்தின் மூலமாக நன்மை அடைந்தனர். அரசும் மக்களுடன் இணைந்து முன்னொரு போதும் இல்லாத வகையில் அதிகளவிற்குப் பனை வளத்தின் மூலம் பனை மரத்தின் மூலம் பயன்பெற்றதென்றால் அதுவடஇலங்கையில் டச்சுக்காரரது காலத்திலேதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடஇலங்கையில் டச்சுக்காரரது பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக வரலாற்றாளர்களும், பொருளியலாளர்களும், அறிஞர்களும் ஓரளவு விரிவாக ஆய்வினைச் செய்த போதும் தனித்து மேற்கூறப்பட்ட இவ்விடயமாக வரலாற்று நோக்கில் இதுவரை எவரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் அக்காலப்பகுதியில் பனை மரமும் அது சார்ந்த பண்டங்களும் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைத் தற்போதைய சமூகத்தவருக்கு எடுத்துக்காட்டுதல் மற்றும் இவ்விடயமாக எதிர்காலத்தில் ஆய்வினை மேற்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு முன்னோடியான ஆய்வாக அமைய வேண்டுமென்பதும் கட்டுரையினது பிரதான நோக்கங்களாக உள்ளது. பெருமளவிற்குவரலாற்று அணுகுமுறையினடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாந்தர ஆதாரங்கள் ஆய்வினது தேவை கருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் டச்சு ஆளுநர்களது அறிக்கைகள் பிரதான |
en_US |