dc.description.abstract |
இலங்கை அரசியல் வரலாற்றுடன் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட அரசியல் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி (முதன்மையானது. சுதந்திர இலங்கையின் அரசியல் திருப்புமுனையின் முன்னோடியான ஐக்கிய தேசியக்கட்சி முதல் சுதந்திர அரசாங்கத்தினை அமைத்தது. இலங்கையின் ஜனநாயக மரபினையும், முதலாளித்துவ - தாராளவாத அரசியல் சித்தாந்தத்தையும் இலங்கை மக்கள் மத்தியில் நிலைப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன். கொத்தலாவல, ஜே. ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிறேமதாஸா போன்றோரின் ஆளுமைமிக்க அரசியல் தலைமைகளையும் கொண்டிருந்த கட்சியாக விளங்கியது. தற்போது ரணில் விக்கிரமசிங்ஹாவின் தலைமைத்துவத்தின் கீழ் பல தோல்விகளைச் சந்தித்தாலும் 2002 இலும் 2015 இலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சவால்களையும் வாய்ப்புக்களையும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்காகும். |
en_US |