DSpace Repository

குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள் - நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு

Show simple item record

dc.contributor.author Krishnarasa, S.
dc.date.accessioned 2022-10-25T05:09:40Z
dc.date.available 2022-10-25T05:09:40Z
dc.date.issued 2015
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8291
dc.description.abstract இலங்கைப் பண்பாட்டில் யதார்த்தமாகக் காணலாம். இவ்வாய்வின் நோக்கமானது மத்திய கால வடஇலங்கையில் இலக்கிய மரபுகளில் பதியப்பட்ட நல்லூர் இராசதானியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களைப் பற்றியும் அவற்றின் வடிவங்களைப் பற்றியும் ஆராய்வதாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஆய்வுகளில் நல்லூர் இராசதானியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தொன்மங்கள் வெறுமனே ஐதீகங்கள் என்ற அடிப்படையில் கையாளப்பட்டிருந்தனவே தவிர அவற்றிற்கும் இடைக்கால வடஇலங்கைச் சமூக உருவாக்கத்திற்குமிடையிலான கருத்தாடல்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருக்கவில்லை. எஸ்.பத்மநாதன், கா. இந்திரபாலா ஆகியோர் அவற்றை தென்னாசியாவின் குறிப்பிட்ட பிரதேசங்கள் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொன்மங்களை அபரிமிதமாகக் கொண்டிருப்பதற்கான காரணம் பற்றி ஆராயும் போது அங்கு சர்வதேச வாணிகத்துறையும், பௌதிக இயற்கை வள - மூலவளங்களுடன் தொடர்புபட்ட வகையிலான உள்நாட்டு சந்தைப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுமே தொடர்ச்சியான குடியேற்றமுறைச் செயற்பாடுகளினை தூண்டிய காரணிகளாக அமைந்திருந்தன. தென்னாசியாவில் குறிப்பிட்ட பிரதேசங்கள் வரலாற்றுக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்ற நடைமுறைக்குள் உட்பட்டு வந்திருந்தமையின் பின்னணியில் தொன்மங்களும் அவற்றினை அடிப்படையாகக் கொண்டவரலாற்றழுத்தியல் மரபுகளும் உருவாக்கம் பெற்றமையை இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன (பக்தவச்சலபாரதி. இலக்கிய மானிடவியல், ப.291). சர்வதேச வாணிபக் கூட்டுக்களுக்கான வாணிப மார்க்கங்களுக்குரிய கேந்திரஸ்தானங்கள் அவற்றின் சமுத்திரவியல் பக்கத் தொடர்புகள் காரணமாக வேகமான வரலாற்று வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தமையைக் காண்கின்றோம். புராதன இந்தியாவில் கேரளம், நேபாளம், காஸ்மீர்என்பன அத்தகையதொரு வாணிபமார்க்கத்திலமைந்த தனித்துவமான பொருளாதார வளம் மிக்க செழிப்பான புலங்களாகவும், சமய அடிப்படையில் தனித்துவமான முறையிலமைந்த சமய வரலாற்று மரபுகளுக்குரிய தொன்மங்களையும் கொண்டிருக்கும் பிராந்தியங்களாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் அத்தகையதொரு பன்முகப்படுத்தப்பட்ட வாணிப, பொருளாதார, சமய வரலாற்று தொடர்புகள் இலங்கையிலும் ஏற்பட்டிருந்தமைக்கான இலக்கிய, தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இலங்கைத் தீவின் தென்கிழக்கிலங்கைப் பிராந்தியம் யாவா மற்றும் மலேசியா, பாலித்தீவு போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து தொன்மையான குடியேற்றங்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உரோகணத்தின் வரலாறு மற்றும் புராதன காலப் பன்மைப் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளை அங்கிருந்து கிடைத்துவரும் புராதனதொல்லியற்சின்னங்களிலிருந்தும், இராவணா மற்றும் பஞ்சவர் ஆட்சி மரபுகளிலிருந்தும், கௌதம புத்தருடைய மகியங்கணைக்கான முதல் வருகை பற்றிய தொன்மங்களிலிருந்தும் காணமுடிகின்றது. வட இலங்கையைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக யாழ்ப்பாணக்குடாநாடு பொறுத்தும் இத்தகைய பண்பாட்டு நிலைமைகளை விளக்கும் தொன்மங்கள் குடியேற்றங்கள் வாயிலாக ஏற்பட்டிருந்தமைக்கான வரலாற்று மூலங்களை மத்திய கால இலக்கிய மரபுகளினூபாக் கண்டு கொள்ள முடிகின்றது. நல்லூர் இராசதானியில் அக்கால முகாமைத்துவ நடவடிக்கைகளை மையப்படுத்திய வகையில் எழுந்த அரச பாரம்பரியம் பற்றிய தொன்மங்கள் கூட குடியேற்ற முறைகளாலேயே உருவாக்கப்பட்டமையை வட வரலாற்றுக்கருவுடைய ஐதீகங்கள் (Historicsal Myths) என்ற அடிப்படையிலேயே அவற்றின் இருப்பினைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான ஓர் ஆய்வியல் சூழலில் இலக்கிய மானிடவியல் en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள் - நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record