Abstract:
இலங்கையில் தேசிய பொதுப்பரீட்சைகளாக தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் க.லா.த உயர்தரப்பரீட்சை ஆகியவற்றின் வடமாகாண தற்போதைய பெறுபேறுகளை தேசிய மட்ட பெறுபேறுகளுடனும், ஏனைய மாகாணப்பெறுபேறுகளுடனும் ஒப்பிடும்போது வடமாகாணம் பின் தங்கிய நிலையில் உள்ளது. எனவே இந்நிலைமையை ஆய்வுசெய்து மேம்படுத்தவேண்டிய தேவை கல்விச் சமூகத்தினர் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எழுகின்றது, இவ்வாய்வானது அண்மைக்கால வடமாகாண பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் போக்கினை இனங்காண்பதுடன், குறைநிலைக்கு பொறுப்பான காரணங்களை இனங்காணவும் மற்றும் மேம்படுத்துவதற்கான எதிர்கால சிந்தனை, திட்டம் மற்றும் செயல்கள் பற்றியும் கவனம் செலுத்துகின்றது.