Abstract:
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய உலகில் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வியலைப் படைப்பிலக்கியமாக்கி வருபவர்களில் நீ. பி. அருளானந்தமும் ஒருவர். இவரின் இந்த வனத்துக்குள்' என்னும் நாவல் இலங்கையில் வாழ்கின்ற வனக்குறவர்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் வாழும் வனக்குறவர்கள் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களின் தாய்மொழி தெலுங்காகும். நிரந்தரமான வாழிடமின்றி அலைந்து திரியும் இக்கூட்டத்தினர் வேட்டையாடுதல்; பாம்பாட்டுதல், குரங்காட்டுதல், சாத்திரம் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்துவருகின்றனர். விஜயனின் கூட்டத்தினருடன் இலங்கைக்கு வந்த தெலுங்கர்களையும், மன்னராட்சிக் காலத்தில் அரண்மனைகளில் பணிபுரிந்த தெலுங்கர்களையும் தமது முன்னோர்களாகக் கூறிவரும் இக்கூட்டத்தினர் சமூக மட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வந்தாலும் இவர்கள் தமக்கெனத் தனியான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிவருகின்றனர். இவை இந்நாவலினூடாக இலக்கியப் பதிவாகியுள்ளன