Abstract:
இந்திய இழுவைப் (டோலர்) படகுகள் பாக்குக்குடா நீர்ப் பிரதேசத்தில் இலங்கை கடலாதிக்கப் பரப்பினுள் அத்துமீறி நுழையும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்த செய்திகளையே 1990 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கை மற்றும் இந்திய பத்திரிகைகளில், அடிக்கடி தலைப்புச் செய்திக்குரிய விடயமாக இருந்து வருகின்றது. பாக்குக்குடா மோதலில் சேர்த்துக் கொண்டுள்ள புதிய பரிமாணங்களான, இலங்கையின் வடபிராந்திய மீனவ மக்களின் யுத்தத்திற்கு பின்னரான நிலைமை மற்றும் அண்மைக்கால இயல்பு நிலைக்கு திரும்புதல் ஆகிய அடிமட்ட உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வருவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். இரண்டாவது நோக்கம் யாதெனில், மோதலின் இயல்பு நிலைமைகளை புரிந்து கொள்வதும், தற்போது ஆட்சியியலின் கீழ் இருப்பதும், அவர்களால் முன்மொழிந்துள்ளதுமான பரிந்துரைகளின் தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்வதுமேயாகும். பாக்குக்குடா மோதலானது, இந்தியாவின் பரவலாக அறிந்திருக்கின்ற இது பற்றிய உள்ளார்ந்த எண்ணங்களுக்கு மாறுபட்டதாக தற்போது தொழில் நுட்பம் வளங்குன்றிய இலங்கை மீனவர்கள் இந்திய இழுவைப்படகு மீனவர்களினால் பாதிக்கப்படுவதை நாம் இங்கு விவாதிக்கின்றோம். இந்திய தரப்பினர், மோதலின் இயல்பு நிலைமையை விளங்கிக்கொள்ளாத வரைக்கும், இலங்கையின் அதிகாரம் அளிக்கப்பட்டோர் மீனவர்களையும் அவர்களது அரசாங்கத்தையும் நெருக்கமாகக்கொண்டு வராத வரைக்கும் அரசாங்கம் மற்றும் மீனவர் மட்டங்களிலான சகல விதமான மோதல் தீர்வு முயற்சிகளும் வினைத்திறனற்றவைகளாகவே இருக்கும் என இக்கட்டுரையின் முடிவில் குறிப்பிடுகின்றோம்.