Abstract:
சமூகவியல் ஆய்வுகளில் வரலாற்றுச் சமூகவியற் புலம் சார்ந்த ஆய்வுகள் தனித்துவம் மிக்கவையாக விளங்குகின்றன. வரலாற்றுச் சமூகவியல் ஆய்வுகள் ஒரு குறித்த காலகட்டத்தின் சமூகத்தின் இயக்கம் மற்றும் அசைவியக்கத்தின் போக்குகளை வெளிக்கொணர்கின்றன. இந்த ஆய்வும் ஒரு வரலாற்றுச் சமூகவியல் ஆய்வாக அமைவதால் இலங்கையில் காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த சமூக உருமாற்றம் ஒன்றினை வெளிக்கொணர்கிறது. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலனிய ஆட்சியின்போது சுதேச உயர்குழாமினராக விளங்கிய முதலியார்களிடத்தில் நிலவிய மரபார்ந்த அம்சங்களில் ஏற்பட்ட உருமாற்றங்களை சமூகவியல் கோட்பாடுகளின் பின்புலத்தில் ஆய்வு செய்கின்றது. அத்துடன் காலனித்துவ காலத்தில் சதேச உயர்குழாமின் உருவாக்கத்திற்குப் பின்புலமான காரணங்கள் குறித்தும் விளக்குகின்றது. உயர்குழாம் உருவாக்கம் தொடர்பான சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வரலாற்று நூல்கள் முன்னைய ஆய்வுத்தகவல்கள் என்பவற்றின் துணையுடன் யாழ்ப்பாணத்தில் கதேச உயர்குழாமின் உருமாற்றம் சமூக உருமாற்றத்தின் ஒரு கூறாக விளக்கப்பட்டுள்ளது.