Abstract:
இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாச்சாரப்பாதுகாப்பிற்கும், தமிழ்மொழி அழியாது பாதுகாக்கப்படவேண்டும். இருந்தபோதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்தேய ஆதிக்கம் என்பவற்றினாலும், இலங்கையில் வரலாற்று ரீதியாக சிறுபான்மையினர்மொழிரீதியான பாகுபாடுகளிற்குட்பட்டு வருவதனாலும், தமிழ்மொழி பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றது. இவ்வாய்வானது தற்காலத்தில், இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தல் நடைமுறைகள், பொதுப்பரீட்சைகளில் தமிழ்ப்பாடத்தில் தேசியரீதியான அடைவுகள், தமிழ் கற்றல் - கற்பித்தலில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை தொடர்பாக ஆராய்கின்றது.