DSpace Repository

கல்வி உலகின் மாற்றத்தில் முக்கிய பங்குதாரர்களாகிய ஆசிரிய ஆய்வாளர்கள்: புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும்.

Show simple item record

dc.contributor.author Jeyaluxmy, R.
dc.date.accessioned 2022-10-18T07:01:39Z
dc.date.available 2022-10-18T07:01:39Z
dc.date.issued 2015
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8264
dc.description.abstract எதிர்கால உலகின் மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் ஏற்றவகையில் முகம் கொடுப்பதற்கும் வெற்றிகொள்வதற்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். கற்றலில் மாணவர்கள் இடர்படும் இடங்களை நன்கு அறிந்து அதற்கான காரணங்களைக் கண்டறிதல் பிரச்சினைகளை இனம்காண்பதில் முக்கியமானதாகும். வகுப்பறையொன்றிலே நாளாந்தம் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் தான் ஆசிரியர்களின் வெற்றி தங்கியுள்ளது. இதனால் கல்விசார்ந்த பிரச்சினைகள் ஆய்வுகள் மூலமாகவே இனம் காணப்பட்டு அதற்கான பரிகார நடவடிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இன்று பாடசாலைகளில் அவற்றின் நோக்கங்கள் நிறைவேற்றப்படாமை, மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு, ஒழுக்க சீர்கேடுகள் - மாணவர்களது உள அழுத்தங்கள் என்பன காரணமாக பரீட்சைப் பெறுபேறுகள் பாதிப்படைதல், அடைவு மட்டம் குறைவடைதல் என்ற வகையில் பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. இவைமாத்திரமன்றி இன்று ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பல துறைகளிலும் பட்டங்கள் பெற்று வெளியேறியுள்ளனர். ஆனால் பட்டம் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் ஆய்வு தவிர்ந்த வேறெந்த ஆய்வு முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது. இதனால் மாணவர்களின் அடைவு மட்டத்திலும் வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஆய்வு முயற்சிகள் அவசியமாகின்றன. பிரச்சினைகள் இனம் காணப்பட்டு பரிகாரம் செய்யப்படும் போது தான் சிறந்த தரமான வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆசிரியர்களால் மேற்கொள்ள முடியும். இந்நோக்கத்தினைக் குறிப்பிட்ட பிரச்சினைகளுடன் இணைத்து தெளிவுபடுத்தும்பொருட்டு இவ் ஆய்வானது அளவை நிலை ஆய்வாக மேற்க்கொள்ளப்படுவது பொருத்தமானதாகும் எனக்கருதி, அதிபர்கள் ஆசிரியர்கள் போன்றோர்களின் கருத்துக்களுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject ஆசிரியர் ஆள்வாளர் en_US
dc.subject புத்தாக்க சிந்தனை en_US
dc.subject பங்குதாரர்கள் en_US
dc.subject வினைத்திறன் en_US
dc.subject உள அழுத்தம் en_US
dc.title கல்வி உலகின் மாற்றத்தில் முக்கிய பங்குதாரர்களாகிய ஆசிரிய ஆய்வாளர்கள்: புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும். en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record