Abstract:
ஆழ்வார்கள் திருமாலிடம் சிறந்த பற்றுடன் வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக இசைநயப் பொலிவுடன் பாடிய பாடல்களை நாலாயிரம் திவ்விய பிரபந்தமாக கொகுத்து தமிழுக்கு அருங்கொடையாக வழங்கியுள்ளனர். ஆழ்வார்கள் இறைவனை குழந்தையாகவும், நாயகனாகவும் பாவித்து பல இசைப் பாடல்களைப் பாடியுள்ளனர். இப்பாடல்கள் சொல்நயமும், பொருள் நயமும், பக்தி நயமும் மிக்கவையாகவும் இனிய பண்களில் பாடுவதற்கு உகந்தவையாகவும் காணப்படுகின்றன. நாயன்மார்கள் போன்றே ஆழ்வார்களும் பண்சுமந்த பாடல்களை இசையோடு கூடியதாக படைத்துள்ளனர். அந்தவகையில் ஆழ்வார்களது பாடல்களில் காணப்படும் இசைச் சிறப்பு பற்றியும் அவர்கள் கையாண்ட பண்கள், தாளங்கள் பற்றி விரிவாக ஆராய்தலினை நோக்மாகக் கொண்டு வரலாற்று மற்றும் விவரண ஆய்வு முறையிலே இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது.