Abstract:
இயல், இசை நயம் மிக்க இசைநாடகமென்னும் பிரிவில் மேலோங்கிப் பலகாலமாக எல்லோராலும் போற்றப்பட்டும், மேடைகளில் நாட்டியநாடகமாகவும், இசைக்கச்சேரிகளில் தனிப்பாடல்களாகவும் அரங்கேற்றப்பட்ட ஒரு இசை நாடகம் அருணாசலக்கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை ஆகும். இராமநாடகக் கீர்த்தனையிலுள்ள இசைப்பாடல்கள் வௌ;வேறு வகையினைச் சேர்ந்தனவானாலும், இராமருடைய புகழைப் பாடுவதால் கீர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'நாடகக்கீர்த்தனை' என்றே பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இராமநாடகக்கீர்த்தனையில் அருணாசலக்கவிராயர் கையாண்டிருக்கின்ற இசைப்பாடல்வகைகள் பற்றியும், பின்னர் எழுந்த இசைநாடகங்களுக்கு அருணாசலக்கவிராயருடைய படைப்பு எவ்வாறு முன்னோடியாக விளங்கியிருக்கின்றமை குறித்தும் நோக்குவதாக அவ்வாய்வுக்கட்டுரை அமைகின்றது.