Abstract:
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் ஆரம் படைத்த தமிழ்நாடு” என்ற பாரதியின் பாடல் வரிகளிலே சிலப்பதிகாரத்தின் மாண்பு உணர்த்தப்படுகின்றது. தமிழிலுள்ள ஐம்பொரும் காப்பியங்களிலே தலையாயது சிலப்பதிகாரமேயாதலால் இது முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது. அக்கால மக்களின் ஆடல், பாடல்களில் இருந்த கலை வடிவங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தள்ளார் இளங்கோவடிகளார். நாட்டுப்புற வடிவங்கள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சங்கமருவிய காலத் தமிழ் மக்கள் என்னென்ன வடிவமுள்ள பாடல்களைப் பாடினார்கள், என்னென்ன கூத்துக்களை ஆடினார்கள். என்பதை எல்லாம் சிலப்பதிகாரத்தினுடாக அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இசைச் செய்திகள் எவை என கண்டறிந்து அது தமிழிசை வளர்ச்சியில் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை ஆராய்தலை நோக்கமாகக் கொண்டு இலக்கிய ஆய்வு மற்றும் விவரண ஆய்வு முறையில் இவ்வாய்வு அமைகின்றது.