Abstract:
தமிழின் பெருமை அளவிடற்கரியது அத்தமிழை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று வகைப்படுத்தி முத்தமிழையும் முச்சங்கம் அமைத்து வளர்த்தெடுத்த தமிழரை உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி”
என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார். உலகில் முதன் முதலில் தோன்றிய மக்கள் தமிழர்கள் என்பதும், முதன் முதலில் பேசிய மொழி தமிழ் என்பதையும் தற்கால மொழியியல் ஆராய்ச்சி வல்லுனரான அலெக்ஸ் கொரியர் போன்றோர் நிறுவியுள்ளனர். அந்த வகையில் உலகம் முழுமையும் ஆட்சி செய்த தமிழில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல் கோடி பேரறிஞர்கள் தோன்றி முத்தமிழுக்கும் தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வாறு தொண்டாற்றியவார்களின் படைப்புக்கள் இன்றளவும் நின்று நிலைப்பதற்கு அவற்றின் தனித்தன்மையே காரணமெனலாம். அவ்வாறான அருந்தமிழ் படைப்புக்கள் தந்த அறிஞர் பெருமக்களில் “அண்ணாமலை ரெட்டியாரும்” குறிப்பிடத்தக்கவர். எனவே அவரின் வரலாறு, மற்றும் அவரின் படைப்புக்களைக் குறிப்பிட்டு அவற்றில் காவடிச்சிந்து எனும் படைப்பானது தமிழிசையில் பெற்றுள்ள சிறப்புகள் எவை என்று தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலக்கிய ஆய்வு, விவரண ஆய்வு முறைகளில் இவ்வாய்வு அமைகின்றது.