Abstract:
ஆய்வின் நோக்கம்: கல்வியியற் கல்லூரிகளில் நிறுவன மட்டத்தில் ஆசிரிய
கல்வியியலாளர்களின் வாண்மை விருத்தி அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை
நடைமுறைப்படுததுவதில் ஏற்படும் தடைகளை இனங்காண்பதும் அவற்றை
இழிவாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதும், நிறுவனமட்டத்தில் நடாத்தக்கூடிய
ஆக்கபூர்வமான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை இனங்காண்பதன் மூலம் ஆசிரிய
கல்வியியலாளர்களை வலுவூட்டுவதற்கு வழி வகுப்பதுவும் இவ்வாய்வின் பிரதான
நோக்கமாகும்.
ஆய்வு முறைகள்: நிறுவன மட்டத்தில் ஆசிரிய கல்வியலாளர்களின் வாண்மை விருத்தியை
மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் பயனுறுதியை அதிகரிக்கும் வழிமுறைகளைக்
கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது, அளவை ஆய்வு வடிவத்தில்
மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளன் அல்லது அவனது உதவியாளன் அடிப்படை தரவுகளை,
புள்ளிவிபரங்களை சேகரிப்பதற்கு தரவுஉற்பத்தியானது உறுப்புகளை நேரடியாகத்
தேடிச்சென்று சேகரிக்கையில் அந்நிலையில் பெறப்படுபவை முதன்மைத்தரவுகள் ஆகும்.
இலங்கையில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் அதிகமான தமிழ்மொழி
மூலகற்கைநெறிகளைக் கொண்ட 5 கல்வியியற் கல்லூரிகளே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இக்கல்வியியற் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரிய கல்வியியலாளர் 50 பேரிடமும்,
கல்வியியற்கல்லூரி முகாமைத்துவ அமைப்பின் மேல் மட்டத்திலுள்ள பீடாதிபதி,
உபபீடாதிபதிகள் 10 பேரிடமும்,; வினாக்கொத்து, நேர்முகம் காணல், தொலைபேசி
உரையாடல்கள் ஆகிய முறைகளில் முதன்மைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்தரவுகள்
அட்டவணைகள், வரைபுகள் என்பவற்றைப் பயன்படுத்தியும் சதவீதம் காணல் போன்ற
கணிப்புக்களினூடாகவும் பகுப்பாய்வு செய்து முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுநோக்கில்
அரசினால் அல்லது நிறுவனங்களினால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட
தரவுத்திரட்டு;க்களில் இருந்து (னுயவய டியமெ) ஆய்வாளன் தரவுகளை பெறும் முறை
இரண்டாம்நிலைத்தரவுகள் (துணைத்தரவுகள்) எனப்படும். கல்வியியல் கல்லூரிகளில்
காணப்பட்ட ஆவணங்கள், புள்ளிப்பதிவேடுகள் பெறுபேற்று அட்டவணைகள் போன்றவற்றில்
இருந்து இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஒரு பெருந்தொகை மக்களை
பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அதிலிருந்து வரையறுத்து தெரிவுசெய்து அம்மக்களின்
பிரதிநிதிகளாகப்பயன்படுத்தி அவர்களைக் கொண்டு ஆய்வு செய்து கருத்துக்களை அறிதலே
மாதிரி எனப்படும். தமிழ்மொழி மூலமான பாடநெறிகளை நடாத்துகின்ற 8 கல்வியியற்
கல்லூரிகளில் 5 கல்வியியற் கல்லூரிகள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 ஆசிரிய கல்வியியலாளர்கள் படையாக்கப்பட்ட மாதிரி
எடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: தொழில்சார் வாண்மை விருத்தி நிகழ்ச்சித்
திட்டங்களின் பயனுறுதியை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்விற்காக
கல்வியியற் கல்லூரிகளின் முகாமைத்துவக் குழுவினர் ஆசிரிய கல்வியியலாளர்கள்
ஆகியோர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதனூடாக பல
முடிவுகள் கண்டறியப்பட்டன.
முடிவுகள்: கல்வியியற் கல்லூரிகளில் கடமை ஆசிரிய கல்வியியலாளர்களில் 90
சதவீதமானோர் தமது உயர்கல்வித் தகைமையாக குறைந்தது ஒரு முதுமாணிப்
பட்டத்தையேனும் பெற்றுக்கொண்டவர்களாகக் காணப்பட்ட போதிலும் மாறிவரும்
தேவைகளுக்கேற்ப புதிய தோற்றமுள்ள ஆசிரியர்களை உருவாக்குவதற்கான செயலாற்றுகை
தொடர்பாக திருப்திகரமான நிலைமை காணப்படவில்லை. ஆசிரிய கல்வியியலாளர்களிடையே
பின்வரும் விடயங்கள் தொடர்பாக நேர்மனப்பாங்குகளையும், திறன்களையும் விருத்தி
செய்யப்பட வேண்டியுள்ளது. கல்வியியற் கல்லூரிகளில் வாண்மை விருத்தி
நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்து நடாத்துவதில் முகாமையாளர்கள் பல்வேறு
பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வின் உட்கோள்கள்: கல்வியியற் கல்லூரிகளில் நிறுவன மட்டத்தில் ஆசிரிய
கல்வியியலாளர்களின் வாண்மை விருத்தி அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடை
முறைப்படுத்துவதில் ஏற்படும் தடைகளை இனங்காண்பதும் அவற்றை குறைப்பதற்கான
வழிமுறைகளைக் கண்டறிவதும், நிறுவன மட்டத்தில் நடாத்தக் கூடிய ஆக்குபூரவமான
பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை இனங் காண்பதன் மூலம் ஆசிரிய கல்வியியலாளர்களை
வலுவூட்டுவதற்கு வழி வகுப்பதும் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும் தலைமைத்துவ பாங்கு,
பங்குபற்றல் முகாமைத்துவமும், வேலைப்பகிர்வும், கண்காணிப்பு, ஊக்குவிப்பு,
ஆலோசனையும், வழிகாட்டலும், தரமான நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்றல் போன்ற
உட்கூறுகளை உள்ளடக்கிய வினாககொத்தானது விரிவுரையாளர்கள் மற்றும் முகாமைத்துவக்
குழுவினருக்கு வழங்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்பட்டது பயன் மிக்க வகையில் ஆசிரிய
கல்வியியலார்கள் வலுவூட்டல் பெறுவதன் ஊடாக நிலையான கல்வி அபிவிருத்தி ஏற்பட
வேண்டு மெனில் தேவை அடிப்படையில் நிறுவனமட்டத்தில் வாண்மை நிகழ்ச்சித் திட்டங்கள்
மேலும் வினைத்திறனுடன் ஒழுங்கமைக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமையினை குறித்த
ஆய்வானது வெளிப்படுத்தியுள்ளது.